பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்றுகூடல் – குடும்ப விருந்து விழா!

10 Min Read
- Advertisement -

அரியலூர் மாவட்டம் செந்துறையில் எழுச்சியுடன் நடைபெற்ற
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
தொகுப்பு: நாகை நாத்திக. பொன்முடி

செந்துறை, நவ. 24 அரியலூர் மாவட்டம் செந்துறையில் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பெரியார் கொள்கைக் குடும்பங்கள் ஒன்றுகூடல் மற்றும் குடும்ப விருந்து விழா, 21.11.2026 அன்று காலை 10.15 மணியளவில் செந்துறை சிறீ முருகன் மகாலில் தொடங்கி, ஒருநாள் முழுவதும் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற அனைவரும் தொடக்கத்தில் தங்களுக்கான படிவங்களைப் பெற்று அதை நிரப்பி ஒப்படைத்தனர். அரங்கில் சுயமரியாதைச் சுடரொளிகளின் பெயர்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, கழகக் குடும்பத்தினர் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சி – கழகப் பாடல்கள்

தொடக்கத்தில்,

“அதோ…

பெரியார் மறைந்தார் எனப் பரிதவித்து இருந்தோம்!

இதோ…

வீரமணிதான் எனக் குரல் ஒலிக்க மகிழ்ந்தோம்!”

என்ற கழகப் பாடலை செந்துறை மதியழகன் சிறப்பாகப் பாடினார். அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

கட்டுரை

பெரியாரை ஏன் பிடிக்கும்?
– மாணவர்கள் உரை

மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற உரை நிகழ்ச்சி யில், பெரியார் செல்வன் பேசுகையில், “எனக்குப் பெரியார் கொள்கையின்மீது அதிக ஈர்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், நான் பழகு முகாமில் கலந்துகொண்டதுதான். அந்த முகாமின் தாக்கமே என்னை இந்த அளவிற்கு மாற்றியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நிலவன், கவின், தருண்யா ஆகியோர் பேசினர்.

மனம் விட்டுப் பேசுவோம்
– மகளிர் அரங்கம்

சுதா மதியழகன் பேசுகையில், “எனக்கு இதுதான் முதல் மேடை. என் வாழ்வில் திருமணத்திற்கு முன்பா, திருமணத்திற்குப் பின்பா எது சிறந்த வாழ்க்கை என்று கேட்டால், திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைதான் என்று சொல்வேன். மூடநம்பிக்கைகள் இல்லாத, நிறைவான, சிக்கனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழர் தலைவர் நீடூழி வாழ்க!” என்று வாழ்த்திப் பேசினார்.

கலா – முருகன் பேசுகையில், “நானும் எனது வாழ்விணையரும் அண்மையில் ஜப்பான் சென்றி ருந்தோம். நம் நாட்டிற்கும், ஜப்பான் நாட்டிற்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. சாலையில் பயணிக்கும்போதுகூட அங்குள்ள மக்கள் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தே பயணிக்கின்றனர்.

நாங்கள் பெரியார் கொள்கையை  ஏற்றுக்கொண்டதால், எங்கள் இல்லத்தில் கடவுள் நம்பிக்கைகள், சாஸ்திர சம்பிரதாயங்கள் எதுவும் கிடையாது. மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம். ஆகவே, பெரியாரை எனக்குப் பிடிக்கும்” என்றார்.

ஆசிரியர் சிவசக்தி – சிவமூர்த்தி பேசுகையில், “நான் ஓர் ஆசிரியர். திருமணத்திற்கு முன்பு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பக்தியில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். எங்கள் இல்லத்தில் என்னைப் பெண் பார்க்க வந்தபோதுகூட, மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், எங்கள் குடும்பத்தினருக்கு லேசான அச்சமும் தயக்கமும் இருந்தன.

பார்ப்பனரை அழைத்து நிச்சயதார்த்தம் செய்தோம். ஆனால், அதில்கூட திருமணத் தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை. ஏனென்றால், திருமண விழாவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரவேண்டும் என்பதற்காக, நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் கழித்துத்தான் திருமணத் தேதியையும் அறிவித்தார்கள்.

பின்னர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். தாலி கட்டவில்லை. தாலிக்குப் பதிலாக எங்கள் இருவரின் பெயர்களும் பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய சங்கிலியை அணிந்துகொண்டேன். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் எங்கள் மண விழா ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைந்துள்ளது. என் கணவர் என்னிடம் எதிலும் பிடிவாதம் காட்டியதில்லை. நான் என்ன சொன்னாலும், ‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிடுவார். விட்டுக்கொடுத்துச் செல்வார். இதற்கெல்லாம் காரணம் பெரியார் கொள்கைதான்.

94 வயதிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உழைக்கும் உழைப்பு, சுறுசுறுப்பு, நடை, எழுத்துகள் ஆகியவற்றைக் கண்டு வியக்கிறேன்” என்று நன்றியுடன் குறிப்பிட்டார்.

ஆசிரியர் இரா. பத்மா பேசுகையில், “நான் தஞ்சை வல்லத்தில் படித்தேன். தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். படிக்கும்போதே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அடிக்கடி சந்திக்கின்ற வாய்ப்புகள் கிடைத்தன. பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றுள்ளேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து ராதிகா – செந்தில்குமார், ஜெயலட்சுமி – மணிவண்ணன், இந்திராகாந்தி – இராமச்சந்திரன், ஞானசவுந்தரி, பத்மாவதி – செந்தில், பரமேஸ்வரி – செல்வகுமார், தீபா, ஜானகி – சிந்தனைச்செல்வன் ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பெரியார் கொள்கையைத் தாங்கள் விரும்புவதற்கான காரணங்களையும், கொள்கைப் பாதையில் மாறாமல் பயணிப்பதையும் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் தியாக முருகன், தாம் ஜப்பான் சென்றிருந்த அனுபவங்களை நீண்ட நேரம் பகிர்ந்துகொண்டார்.

கட்டுரை

கழகப் பாடல்கள்

தொடர்ந்து சீனி. அறிவுமழை,

“உலகில் ஒரு பெரியார் வந்தார்…

உயர்ந்ததொரு கொள்கை தந்தார்…”

என்ற பாடலைப் பாடினார்.

செந்துறை மதியழகன்,

“தங்கமே! உனக்குத் தங்கம் வழங்கி வந்தோம்…

இந்தத் தரணியிலே உனது புகழைப் பரப்புகிறோம்…”

என்ற பாடலைச் சிறப்பாகப் பாடினார்.

சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்பு

சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி ஆகியோருக்குப் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க. சிவமூர்த்தி பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

சிறப்பு விருந்தினர்கள் உரை

முனைவர் துரை. சந்திரசேகரன் பேசுகையில், “மான உணர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பெற்ற கொள்கை வீரர்களான சுயமரியாதைச் சுடரொளிகள் ஏராளமான தோழர்களின் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளீர்கள். தமிழ் மறவர் கீ. வை. பொன்னம்பலனார், மு. சிங்காரம், ஆசிரியர் வேலாயுதம் போன்ற ஏராளமான தோழர்கள் அரியலூர் மண்ணில் தந்தை பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் சென்றவர்கள். அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீரவணக்கம்!

அரியலூர் மாவட்டம் என்பது தமிழ் உணர்வாளர்கள், இன உணர்வாளர்கள், புரட்சிகரச் சிந்தனையாளர்கள் நிறைந்த மண். தமிழர்களின் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த மண் தனித்தன்மை வாய்ந்தது. அதற்குக் காரணம் பெரியார் கொள்கை.

இந்த நவம்பர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நவம்பர் 26 சட்ட நகல் எரிப்புப் போராட்டம்தான். தந்தை பெரியார் அந்தப் போராட்டத்தை அறிவித்த உடனேயே தோழர்கள் போராட்டக் களத்திற்குத் தயாராகிவிட்டார்கள்.

அது என்ன போராட்டம்? ஜாதியைப் பாதுகாக்கின்ற இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவின் நகலைக் கொளுத்திடத் தந்தை பெரியார் ஆணையிட்டார். தோழர்கள் அதனைச் செய்து சிறை சென்றார்கள். அவர்கள் சிறையில் இருந்தபோது அவர்களுடைய குடும்பங்கள் எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்திருக்கும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு தியாகம் செய்த கருஞ்சட்டை வீரர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தந்தை பெரியார் என்ன நினைத்தாரோ, தனது கொள்கைகளை மக்களிடம் எப்படியெல்லாம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினாரோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொள்கைகளை எடுத்துச் சென்று வருகிறார்.

டிசம்பர் 2 அன்று 94ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தத் தலைவரை இன எதிரிகள் பலமுறை தாக்கியுள்ளனர். அத்தனை எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, தொடர்ந்து பேசியும், ஒவ்வொரு நாளும் அறிக்கைகள் எழுதியும் வருகிறார்.

அந்தத் தலைவர் நூற்றாண்டைக் கடந்து வாழ வேண்டும். அதற்கு நீங்கள் வாழ்த்தினால் மட்டும் போதாது; விடுதலை சந்தாவையும் வழங்க வேண்டும். அவருக்காக அல்ல; தமிழ் சமுதாயத்திற்காக!” என்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பேசுகையில், “தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை யொட்டி, சமூக நீதிக்கான பெரியார் நடை, ‘பெரியார் கேட்கும் கேள்விகள்’ நூல் பரப்புரை, பெரியார் இனிப்புப் பெட்டகம் வழங்குதல், பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி டத் தமிழர் தலைவர் அறிவுறுத்தியிருந்தார்.

அந்த அறிவிப்பிற்கு இணங்க, அரியலூர் மாவட்டம் புத்தகப் பரப்புரையைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திச் சிறப்பித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் என்பது ஒரு வாழ்வியல். நம் வாழ்வியலுக்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் பெரியார் எதிர்த்தார்.

பெரியார் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தால் வெற்றி உறுதி. ஒருவேளை பின்பற்றாவிட்டால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

குழந்தை பிறந்தது முதல் 16ஆம் நாள், முதலாம் ஆண்டு பிறந்த நாள், மொட்டை அடித்தல், காதணி விழா, திருமணம், பண்டிகைகள், தேர், திரு விழாக்கள், எட்டுக்குடி முருகனுக்குக் காவடி எடுத்தல், பாத யாத்திரை, அமாவாசை, இறப்பு, பால் தெளித்தல், எட்டாம் நாள், கருமாதி, பின்னர் 30ஆம் நாள், ஓராண்டுக்குப் பிறகு திவசம், திதி எனப் பல்வேறு சடங்குகள் உள்ளன.

இவற்றையெல்லாம் செய்வதற்காகக் கடன் வாங்கி வீண் செலவு செய்கின்றனர்.

ஆனால், பெரியார் கொள்கையைக் கடைப்பிடிப்ப வர்களுக்கு இத்தகைய மூடநம்பிக்கைச் சடங்குகளால் ஏற்படும் செலவுகள் மிச்சமாகின்றன. அந்தப் பணத்தைச் சேமிக்க முடிகிறது.

ஆகவே, பெரியார் கொள்கையைப் பின்பற்றிக் கொள்கை வழியில் நடந்தால் வெற்றி உறுதி. சுயமரியாதையுடன் வாழலாம்” என்று உரையாற்றினார்.

மதிய உணவு

மதியம் 2 மணியளவில் குடும்ப விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான இறைச்சி உணவு வழங்கப்பட்டது. காலையில் அனைவருக்கும் வடை, தேநீர் வழங்கப்பட்டது.

வயது பாராமல் விளையாட்டுப் போட்டிகள்!

மதிய உணவிற்குப் பிறகு, பிற்பகல் 2.40 மணி யளவில் பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை வயது பாராமல் அனைவரும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

பலூன் ஊதி உடைத்தல், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பெரியார் பிஞ்சுகள், மாண வர்கள், மகளிர், இளைஞர்கள், கழகத் தோழர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு விளையாடினர்.

விளையாட்டுப் போட்டிகளை மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி ஒருங்கிணைத்து நடத்தி னார். போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் கல்வி உபகரணங்கள், எழுதுகோல்கள் உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

முதல் போட்டி – பலூன் ஊதி உடைத்தல்

பெரியார் பிஞ்சுகள்: தமிழரசன், யாழ் இனியன், தமிழ்நிலவன்

கழக மகளிர் அணியினர்: பகுத்தறிவு, இலக்கியா, பத்மாவதி

கழகத் தோழர்கள்: செல்வகுமார், ஏழுமலை, இராமச்சந்திரன், மதியழகன்

இரண்டாவது போட்டி – இசையுடன் சுழலும் நாற்காலி

பெரியார் பிஞ்சுகள்: அறிவுச்செல்வன், யாழ் இனியன், சுவேதா

மகளிரணி: ராதிகா, அனிச்சமலர், ராஜலட்சுமி

பெரியார் பெருந்தொண்டர்கள்: இரா. இராமச்சந்திரன், தமிழரசன், தஞ்சை ஏ.வி.என். குணசேகரன்

வெற்றி பெற்றவர்களுக்கு முனைவர் துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர்.

பாராட்டும் – சிறப்பும்!

அரங்கின் உரிமையாளர் கொளஞ்சிநாதன் மற்றும் தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற்ற புலவர் அய்யன் பெருமாள் ஆகியோருக்கு முனைவர் துரை. சந்திரசேகரன் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை வகித்து உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க. சிவமூர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார்.

மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாவட்டக் காப்பாளர் சு. மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச்செல்வன் ஆகி யோர் உரையாற்றினர்.

பொதுக்குழு உறுப்பினர் ராஜா அசோகன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சு. அறிவன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட விவசாய அணித் தலைவர் சங்கர், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் இளவழகன், மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர் மதியழகன், மாவட்டத் தொழிலாளர் அணிச் செயலாளர் இளவரசன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு. ஜெயராஜ், மாவட்ட மகளிரணித் தலைவர் பரமேஸ்வரி, திருமானூர் ஒன்றியத் தலைவர் க. சிற்றரசு, ஒன்றியச் செயலாளர் பெ. கோபிநாதன், திருமானூர் நகரத் தலைவர் சு. சேகர், செந்துறை ஒன்றியத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் ராசா, செல்வகுமார், நகரத் தலைவர் இளங்கோவன், அரியலூர் ஒன்றியச் செய லாளர் செந்தில், நகரத் தலைவர் துரை. காமராஜ், நகரச் செயலாளர் ஆட்டோ தர்மா, தாப்பலூர் ஒன்றியத் தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றியத் துணைத் தலைவர் ஆசிரியர் ராஜேந்திரன், ஒன்றியத் துணைச் செயலாளர் சி. தமிழ்ச்சேகரன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் கோ. பாண்டியன், நகரத் தலைவர் ந. சுந்தரம், நகரச் செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, நகரத் துணைத் தலைவர் சுந்தரவடிவேலு, நகரத் துணைச் செயலாளர் டைல்ஸ் பட்டுசாமி, மீன்சுருட்டி சேக்கிழார், மாவட்ட வழக்குரைஞரணியின் அமைப்பாளர் மு. ராஜா, மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன், ஆண்டிமடம் இராவண கோபால், ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் குழுமூர் இராமச்சந்திரன், பொறியாளர்கள் பெ. நடராஜன், இரா. கோவிந்தராஜன், மருத்துவர்கள் தனித்தமிழ், கொற்றன், மருத்துவர் தமிழ்மணி, ஆசிரியர் சிவசக்தி, ஆசிரியர் ரவி, எழிலரசி, ராஜமாணிக்கம், அனிச்சமலர், சங்கர், இந்துமதி நீலமேகம், காந்தி சிற்றரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக, அரியலூர் நகரத் தலைவர் துரை. காமராஜ் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *