தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் விநாயகர் சிலையை அகற்றக் கோரிய வழக்கு! சென்னை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

- Advertisement -

சென்னை, நவ.23 கொரட்டூா் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில், சென்னை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடா்பாக கொரட்டூரைச் சோ்ந்த டி.சதீஷ்குமார் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கொரட்டூா் வாட்டா் கேனல் சாலையில், உள்ள தனியார் குடியிருப்பில் வசிக்கிறேன். இந்த குடியிருப்பின் முக்கிய நுழைவு வாயில் அருகே சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட விநாயகா் சிலையை அகற்ற, அக்.29 ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி சிலை அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அக்.30 ஆம் தேதி நள்ளிரவு அகற்றப்பட்ட சிலை, குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

எனவே, அனுமதியின்றி அமைக் கப்பட்ட விநாயகா் சிலை மற்றும் சிமென்ட் மேடையை அகற்ற உத்தர விட வேண்டும். அதுவரை அங்கு மேற்கொண்டு கட்டுமானம் மற்றும் வழிபாட்டுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், சிஎம்டிஏ, ஆகியோர் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *