பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.முத்தையா (பணி நிறைவு, தமிழ்நாடு மின் வாரியம்) துணைவியார் மு.நாகூரம்மாளின் 10ஆம் ஆண்டு நினைவு (24.11.2026) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

கும்பகோணம் (கழக) மாவட்டம், பட்டீஸ்வரம், பெரியார் பெருந்தொண்டர் க.அய்யாசாமியின் துணைவியார் அ.சவுந்தரவள்ளி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு (23-11-2026) நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000/- அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

திருச்சி தெற்கு காட்டூர், காவேரிநகர், கழக மாநகர அமைப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் சி.கனகராசு – பங்காரு ஆகியோரின் மூத்த மகன் க.ராசராசன் 2 ஆம் ஆண்டு நினைவு (24.11.2026) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.
