பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் காலஞ்சென்ற ஒரத்தநாடு தலை மையாசிரியர் க. வீராசாமியின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் நல்லாசிரியை மா. அன்னக்கிளியின் (வயது 86) முதலாம் ஆண்டு நினைவு நாளை(20.06.2025) முன்னிட்டு, அவர்களது மகன் பேராசிரியர் முனைவர் வீ.அறவாழி குடும்பத்தினரால் ரூ.1000 நன்கொடையாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளிக்கப்பட்டது.
– – – – –

அருப்புக்கோட்டை கவிமாமணி ஆயை.மு.காசாமைதீன் அவர்களின் 80 ஆம் பிறந்த நாள் (18.06.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.1000 நன்கொடையாக வழங்கினார். மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் மற்றும் தோழர்கள் அவரது இல்லம் சென்று பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி இயக்க நூல்களைப் பரிசளித்தனர்.
– – – – –

திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வுக்கு பின் 2002- இல் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி, திருச்சி விடுதலை பதிப்பு தொடங்கிய நாள் முதல் திருச்சி போலீஸ் காலனி விடுதலை முகவராக பணியாற்றி வரும் இரா.தமிழ்ச்சுடர் அவர்களின் 82 ஆவது பிறந்த நாள் (20.6.2025) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளார்.
