பெங்களூரு, நவ. 23- பெங்களூரு அல்சூர் ஏரியின் தென் மேற்கின் திருப்பத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சீர்செய்யும் பணியை உணவுத் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் சீரிய முயற்சியால் மேம்பாடு செய்யும் சீரமைப்புப் பணியை கருநாடக மாநில அரசால் செய்யப்பட்டு உள்ளது. இதனை பாராட்டும் வகையில் 15.11.2026 அன்று காலை 10 மணிக்கு பெங்க ளூரு தேவராஜ் அர்ஸ் பவனில் பாராட்டுக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
தாய் தமிழ் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர், திருவள்ளுவர் சங்கத் தலைவர் எல்.டிகுர் தலைமையில் அவரது முயற்சியால் இதற்கு ஏற் பாடுகள் செய்யப்பட்டது. உணவுத் துறை அமைச்சர் மேள முழக்கங்களோடு மேடைக்கு அழைத்து வரவேற்கப்பட்டார்.
முதல் நிகழ்வாக அமைச்சருக்கு கருநாடக மாநில திராவிடர் கழக மாநிலத் துணைத் தலைவர் வழக்குரைஞர் அருண், மாநிலக் கழகக் காப்பாளர் மு.சானகிராமன் இருவரும் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர்.
இந்நிகழ்வில் கருநாடக மாநிலத் திராவிடர் கழக நிர்வாகிகளான செயலாளர் இரா.முல்லைக்கோ, கழக மூத்த உறுப்பினர் புர.கஜபதி அவரது இணையர் செயலட்சுமி, துணைச் செயலாளர் குஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், மென்பொருள் அணித் தலைவர் கரு.பாஸ்கரன், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் சரவணன் மற்றும் பல உறுப்பினர்கள் நிறைந்த கருஞ்சட்டையினர் கலந்து கொண்டனர். அரங்கம் முழுவதும் ஏராளமான அமைப்பினரும், பொது மக்களும் மகளிரும் பெரும் அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
