யுஜிசி-நெட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு டில்லியில் பேரணி நடத்த முயன்ற மாணவர்கள்மீது காவல்துறை தடியடி எஸ்எப்அய் தலைவர்கள் உட்பட பலர் கைது!

புதுடில்லி, ஜூலை 10 யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லி தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை நோக்கி ‘சலோ என்டிஏ’ என்ற பெயரில் அமைதிப் பேரணி நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மாணவர்கள் டில்லி காவல்துறை யால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். தில்லி காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எஸ்எப்அய் டில்லி மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்எப்அய் டில்லி மாநிலத் தலைவர் சூரஜ் எலமோன், செயலாளர் ஆயிஷி கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) முற்றிலும் ரத்து செய்யக் கோரி, டில்லியில் உள்ள என்டிஏ அலுவலகத்திற்கு மனு அளிக்க மாணவர்கள் ஜூன் 6 அன்று அமைதியான முறையில் திரண்டனர். ஆனால், அவர்களின் ஜனநாயகப் பூர்வமான போராட்டத்திற்கு அனுமதி மறுத்த டில்லி காவல்துறை, மாணவர்கள் மீது உடல் ரீதியான தாக்குதல்களை நடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் எஸ்எப்அய் டில்லி மாநி லத் தலைவர் சூரஜ் எலமோன், மாநில இணைச் செயலாளர் மெஹினா பாத்திமா, மாநிலத் துணைத் தலைவர் ஆரிப் சித்திகி மற்றும் மாநி லக் குழு உறுப்பினர்களான சகி, அனில், சோகன் உள்ளிட்ட முக்கிய மாணவர் தலைவர் களும் அடங்குவர்.

போராட்டம் தொடரும்

‘‘நியாயமான மற்றும் நம்பகமான தேர்வு முறையை வேண்டிப் போராடும் மாணவர்களின் குரலை ஒடுக்க டில்லி காவல்துறை வன்முறையைக் கையில் எடுத்துள்ளது. காவல்துறை அடக்குமுறைகளைக் கொண்டு மாணவர்க ளின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. தேசிய தேர்வு முகமையை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும், யுஜிசி-நெட் முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசா ரணை நடத்தப்பட வேண்டும், மேலும் மாண வர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீதிக்கான எங்கள் போராட்டம் தொடரும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் ஏன்?

நெட் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஜலந்தர் (பஞ்சாப்) தேர்வு மய்யம் ரத்து செய்யப்பட்டது ; பல்வேறு பாடங்களில் பெருமளவிலான கேள்வி கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன; வினாத்தாளில் அப்பட்டமான எழுத்துப் பிழைகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிழைகள் இருந்தன; மேலும், கேள்விகள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற தீவிரமான சந்தேக மும் எழுந்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்0குறியாக்கியுள்ள இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, என்டிஏ அமைப்பை உடன டியாகக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடைபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *