வரிச்சலுகை, வேலைவாய்ப்பு விவகாரம் பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி!

- Advertisement -

புதுடில்லி, நவ.21  வரிச் சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரும் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளையும் ஊழியர்களின் ஊதியத்தையும் அதிகரித்துள்ளதா எனப் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர் சனங்களை முன்வைத் துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு

டில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் (FICCI) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசால் வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கும் சூழலில், தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனவா மற்றும் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளனவா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தொழில் நிறுவனங்களுக்கு எவ்வளவு வரிச்சலுகைகள் அளித்தாலும் போதுமானதாக இருப்பதில்லை என்றும், அவர்களுடைய பணத் தேவைக்கான பசி அந்த அள விற்குப் பெரிதாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனம்

பிரதமரின் இந்தக் கருத்து களுக்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: அரசின் கொள்கைகள் மீதான விமர்சனம்: “வரிச்சலுகை அளித்தும் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவில்லை, வேலைவாய்ப்பையும் உருவாக்க வில்லை என்று பிரதமர் தொழில் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்ட வில்லை; மாறாக, அது அவரது சொந்த வாக்குமூலமாகவே தெரிகிறது,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனியார் மயமாக்கல் குறித்த கேள்வி: யாருக்குப் பசி என்பது நாட்டிற்கே தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், காடுகள், மின்சாரம், நிலக்கரி மற்றும் சாலை அமைத்தல் உள்ளிட்ட துறைகளைத் தனி யார் மயமாக்கியதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

வேலைவாய்ப்புகளை உரு வாக்கி வந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற நடவ டிக்கைகளால் பாதிக்கப்பட் டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நேர்மையாகச் செயல்படும் பெரிய நிறுவ னங்கள் போட்டியிலிருந்து அகற்றப்பட்டு, சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தனி ஆதிக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விலை உயர்வையும் போட்டி யின்மையையுமே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விலைவாசி மற்றும் வேலையின்மை

தனது உரையில் “இதற்கெல் லாம் யாரும் கைதட்ட மாட் டீர்கள்” எனப் பிரதமர் கூறி யதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “விலைவாசி உயர்வால் தொழில்துறையினர், வர்த்தகர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், ஏழைகள் மற்றும் வேலையின்மையால் இளைஞர்கள் என யாராலும் கைதட்ட முடியாத சூழலை அரசின் கொள்கைகள் உருவாக்கி யுள்ளன. உங்களுக்குத் தேவையான கைதட்டலையும் தட்டுகள் தட்டும் சத்தத்தையும் எஞ்சியுள்ள ஆதரவாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்,” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *