அமெரிக்காவை விட்டு வெளியேற நினைக்கும் இந்தியர்கள்… காரணம் என்ன?

3 Min Read

வாசிங்டன், ஏப். 25- பல காலங்களாக வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த வாழ்க்கை சூழலுக்காக இந்தியர்கள் அமெரிக்காவை ஒரு முக்கியமான இடமாக பார்த்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அங்கு வசித்துவரும் இந்தியர்கள் தற்போது திடீரென அந்நாட்டை விட்டு வெளியேற நினைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இது உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல மாறாக அங்கு சூழல் குறித்தான எதார்த் தமான கவலைகளின் வெளிப் பாடு என்பதை கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) மற்றும் யூகோவ் (YouGov) இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்து கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 54 லட்சம் இந்தியர்களில் 40% பேர் அந்த நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவது இந்திய சமூகத்தின் மனநிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை காட்டுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்களை ஆராயும்போது முதலில் அரசியல் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. வெளியேற நினைப்பவர்களில் 58% தற்போதய அரசியல் போக்குதான் தங்கள் அதிருப்திக்கு முதன்மை காரணம் என்கின்றனர்.

அதிபர் டிரம்ப் செயல்பாடுகள் மற்றும் அவரது குடியேற்ற கொள் கைகள் இந்திய வம்சாவளியினரை ஒருவித பாதுகாப்பற்ற உணர்வுக்கு தள்ளியுள்ளன. ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற அரசியல் முழக்கம் அங்கு நீண்டகாலமாக குடியிருக்கும் இந்தியர்களை ஒரு அந்நியராக உணரவைப்பதாக பலர் கருதுகின்றனர். இந்தியர்களை இழிவாக விமர்சிக்கும் வகையில் டிரம்ப் பதிவிட்ட கருத்துக்கள் அவர்களின் மனக்காயத்தை அதிகமாக்கியுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக பொருளாதார சவால்கள் இந்திய குடும்பங்களை வெகுவாக பாதிக்கின்றன. அமெரிக்காவில் தற்போது வாழ்வாதார செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. முக்கிய நகரங்களில் வீடுகளின் வாடகை பல மடங்கு உயர்ந்துள் ளதும் மற்றும் குழந்தை வளர்ப்புக் கான செலவுகள் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாயை தொடுவதும் நடுத்தர வர்க்கதினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. இதனால் எவ்வளவு உழைத்தாலும் நிலையான சேமிப்பு இல்லை என்ற நிதி நெருக்கடி 54% உள்ளது.

மேலும், விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள நிச்சயமற்ற தன்மை போன்றவை தங்களின் எதிர்கால திட்டங்களை மீண்டும் ஒருமுறை யோசிக்க வைக்கின்றன. இவற்றுடன் சேர்த்து பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்தியர்களிடையே நீடிக்கின்றன. சுமார் 41% சமூக பாதுகாப்பு மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் குறித்து அதிருப்தி கொண்டுள்ளனர். பணியிடங்களிலும் பொது இடங் களிலும் தங்களுக்கு கிடைக்கும் அணுகுமுறை நிம்மதியான சூழலை கொடுக்கவில்லை என் பது ஆதங்கமாக உள்ளது.

அதேபோல், விசா (Visa) மற்றும் கிரீன் கார்டு (Green Card) நடைமுறைகளில் பல காலங் களாக நிலவும் சிக்கல்களும் இந்தியர்களை விரக்தியடைய செய்கின்றன. தகுதியான பணி யாளர்கள் பல ஆண்டுகள் உழைத்தாலும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில் இருக்கும் நீண்ட கால இழுபறி நிலை பலரை மாற்று திட்டங்களை சிந்திக்க தூண்டுகிறது. இறுதியாக தங்களின் அரசியல் விருப்பங்களிலும் இந்தியர்கள் பெரிய மாற்றத்தை காட்டியுள்ளனர்.

முன்பு குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் இப்போது கட்சி பாகுபாடுமின்றி செயல்பட தொடங்கியுள்ளனர். சுமார் 30% தற்போது சுழற்சி வாக்காளர்களாக மாறி வருகின்றனர். கட்சி அடையா ளத்தை விட தங்களின் பொரு ளாதார உறுதி மற்றும் குடும்ப பாதுகாப்பிற்கே அவர்கள் இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அமெரிக்காவில் இருந்த வாழ்க்கை சூழல் இன்று பல்வேறு சவால்களை கொண்டிருப்பதாக இந்தியர் கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு அமெரிக்காவில் குடியேறியவர்களின் எதிர் பார்ப்பு களுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *