தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன ஊழியர்கள் பெருமளவில் பதவி விலகல் குறித்து அரசு விளக்கம்

- Advertisement -

சென்னை, நவ. 21- தொழில் துறையின் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஜூலை மாதம் பெருமளவில் ஊழியர்கள் பதவி விலகியதாக வெளியான தகவலை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.

தமிழ்நாடு தொழில்துறையின்கீழ் செயல்படும் வழிகாட்டி நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களை அணுகுவது, முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற் கான வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழிகாட்டி நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 15 பேரை பணியில் இருந்து விலக வலியுறுத்தியதாக தெரிகிறது.

முந்தைய ஆட்சிகளில் நியமிக்கப் பட்டவர்கள் என்பதால் இந்த நடவடிக்கையை தொழில்துறை மேற்கொண்டது. அதன் அடிப் படையில் 15 பேரும் கடந்த ஜூலை மாதமே பணியில் இருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் சமீபகாலமாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்வதாக திமுக உள்பட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், அதற்கு தவெக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து பதவி விலகியவர்களில் கிறிஸ்டோ லாரல், பிரபாகரன், ப்ரீஜா பிரசாத் ஆகிய உள்பட 4 பேர் ஆந்திர மாநில பொருளாதார மேம் பாட்டுக் குழுமத்தில் சமீபத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மூலமாகவே ஆந்திரா வுக்கு நமது தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனத் தில் கடந்த ஜூலை மாதம் பெரு மளவில் ஊழியர்கள் பதவி விலக வில்லை.

இதுதொடர்பாக சமூக ஊடகங் களில் வெளியான செய்திகள் தவறானவை. ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது இயல்பான நிகழ்வாகும். சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், சொந்த மற்றும் குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வழிகாட்டி நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளியேறு கின்றனர்.

ஊழியர்கள் தங்களது தொழில்முறை வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு வேறு வாய்ப்புகளைத் தேர்வு செய் வதை நாங்கள் மதித்து வருகிறோம்.

முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கி யமான போட்டியை மேற்கொண்டு வருகிறது.

இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் களின் விருப்பமான முதலீட்டு இடமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *