தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு முழு ஆதரவு! பொதுச் செயலாளர் டி.சி.சேகர் அறிவிப்பு!

திருப்பூர், ஏப். 19– தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு ஆதரவினை தெரிவிக்கிறது என அதன் பொதுச் செயலாளர் டி.சி.சேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:–
திருப்பூர் மாவட்ட மிகவும் பிற்படுத் தப்பட்டோர் (MBC) கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 17.4.2026 அன்று திருப்பூரில் மாநில பொதுச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பில் MBC உள்ள சமுதாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வருகிற 2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் “சமூக நீதியை கடைப்பிடிக்கின்ற தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், MBC கூட்டமைப்பில் உள்ள சமு தாயத்தினர் தவறாமல் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இவ்வாறு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.சி.சேகர் தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *