ஒன்றிய அரசு அமைப்புகளிடம் மட்டுமே சிக்கும் போதைப்பொருட்கள்! தமிழ்நாடு போதைத் தடுப்புப் பிரிவு என்ன செய்கிறது?

- Advertisement -

சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் போதைபொருட்களை கிலோ கணக்கில் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அடுத்தடுத்து கைப்பற்றி வருகின்றன. இதில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கடுமையாக குழப்பமடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இதற்கு என்றே சிறப்புக் காவல் படையையும் உருவாக்கி உள்ளது. ஆனால், கடந்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் பிடிபட்ட இரண்டு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களையும் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பே கண்டுபிடித்துள்ளது.

இதனால், தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் தடுப்புத் தனிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், போதைப்பொருள் தடுப்புக்காக 65 சிறப்புப் பிரிவு காவல் நிலையங்களை அமைக்க ரூ.264 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இதற்காக 1,300க்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போதைப்பொருள் தடுப்புப் பணியைத் தவிர வேறு எந்தப் பணியும் வழங்கக் கூடாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

இவ்வளவு பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், மாநிலத்தின் உள்ளே நடக்கும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்களைத் தமிழ்நாடு காவல் துறையால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னை மாதவரம் பகுதியில் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அய்ஸ்கிரீம் கொண்டு செல்லும் வேன் ஒன்றின் குளிர்பதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 பொட்டலங்களில் இருந்து 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது

இதனைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், “உள் துறையைத் தன்வசம் வைத்துள்ள ஜோசப் விஜய், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதுடன் நின்றுவிட்டார.. களத்தில் 65 தனிப்படைகள் இருந்தும் எந்தப் பயனும் இல்லை” எனக் கடுமையாகச் சாடி வருகின்றனர். சாதாரண சில்லறை விற்பனையா ளர்களைப் பிடிப்பதைத் தாண்டி, கடல் வழியாக நடக்கும் பன்னாட்டு போதைப்பொருள் கும்பல்களைத் தடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப் படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *