பிறருக்கு தேவைப்படும் வகையில் உடல் உறுப்புக் கொடையளிக்க அனைவரும் முன்வரவேண்டும்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 10– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

எங்கும் நிறைந்து விட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்ற னர். இந்தியாவுக்கே முன்னோ டித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத் துள்ளனர். 

அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடலுறுப்பு கொடை செய்ய முடிவெடுத்த சேலத்தைச் சேர்ந்த தி.மு.க. உடன் பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன். 

கடந்த 2009-ஆம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடலுறுப்புகளைத் கொடை அளிக்க செய்ய விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டு, அனைவரும் உடலுறுப்புத் கொடை அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்ததை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.  அனைவரும் உடலுறுப்பு கொடை செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்!

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *