பெரம்பலூர் மாவட்ட ப.க. தலைவர் பெ.நடராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆ.ராசா எம்.பி. வாழ்த்து

2 Min Read

பெரம்பலூர், மே. 30- பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசனின் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்த, பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராசன், கடந்த 36 ஆண்டு காலம் கல்வி துறையில் ஆசிரியராக பணியாற்றி,  31.05.2026 அன்றுடன் பணி நிறைவு பெறுகிறார்.

அதற்கான பணி நிறைவு பாராட்டு விழாவானது, தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், அய்பெட்டோ, அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை முன்னிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நேற்று (29.05.2026) நடைபெற்றது. முன்னதாக ந.மு.பகுத்தறிவாளன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் ஒன்றிய அமைச்சர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் பங்கேற்று பாராட்டுரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக பொதுசெயலாளர் வி.மோகன், தமிழக ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், பெரம்பலூர் மாவட்ட கழக காப்பாளர் அக்ரி ந.ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன், அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம், அரியலூர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் விசயலட்சுமி, அம்சவல்லி,

ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலை வர் செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சங்கர், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்க.சிவமூர்த்தி உள்ளிட்டோர் பங்குபெற்று வாழ்த்துரையாற்றினர்.

நன்கொடை வழங்கல்

இந்நிகழ்வை தொடர்ந்து இணையர் முத்துக்கண்ணு – நடராஜன் ஆகியோரது மகன் ந.பகுத்தறிவாளன் – யஸ்சஸ்வி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூபாய் 40 ஆயிரமும்,  விடுதலை நாளேட்டிற்கு (5 சந்தா) ரூபாய் 10 ஆயிரம் வழங்கினர். பெரியார் விருதாளர் கு.வரதராசன், பெரியார் உலகத்திற்கு ரூபாய் 2 ஆயிரம், இரா.எட்வின், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.தமிழரசன், ஆ.ஆதிசிவம், செ.துரைராஜ் ஆகிய அய்வரும் விடுதலை நாளேட்டிற்கு ஓராண்டு சந்தா தலா 2 ஆயிரம் ஆசிரியர் அய்யா அவர்களிடம் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியை பெருமக்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, விழா நிறைவாக ஆசிரியை லதா நன்றி உரையுடன் பணி நிறைவு பாராட்டு விழா நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *