அரசுப் பணத்தையும், மக்கள் நிதியையும் செலவழித்த பிறகு ஒரு திட்டத்தைப் பாதியிலேயே எப்படிக் கைவிட முடியும்?

3 Min Read
- Advertisement -

பரந்தூர் விமான நிலையம் கைவிடலுக்கு எதிரான
பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை, நவ. 20- ‘‘அரசுப் பணத்தையும், மக்கள் நிதியையும் செலவழித்த பிறகு, ஒரு திட்டத்தைப் பாதியிலேயே எப்படிக் கைவிட முடியும்? முந்தைய அரசு முறை யான ஆய்வுகளை நடத்தி அனைத்து முடிவுகளையும் இறுதி செய்த பிறகு, அந்தக் குறிப்பிட்ட இடம் சாத்தியமற்றது என்று புதிய அரசு எப்படிக் கூற முடியும்?’’ என்று கேட்டனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை இன்று (20.11.2026) நடைபெற்றது.

அதன் விவரம் வருமாறு:

சென்னையைச் சேர்ந்த மென் பொறி யாளரும், பதிப்பாளருமான கவுதமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இட நெருக்கடியை சமாளிக்க சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இதுவரை 1,700 ஏக்கர் நிலத்தைக் கைய கப்படுத்த 680 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு, 48 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தத் திட் டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும், 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும், எந்தவித தொழில்நுட்பப் புள்ளி விவ ரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் 110 ஆவது விதி யின் கீழ் வெளியிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கை விட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்கத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட முடிவை அரசி யலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். கைவிடும் முடிவை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (20.11.2026) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் போது, திட்டத்தைக் கைவிட்டதற்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசுத் தரப்பிடம் காட்டமான கேள்விகளை முன்வைத்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘அரசுப் பணத்தையும், மக்கள் நிதியையும் செலவழித்த பிறகு, ஒரு திட்டத்தைப் பாதியிலேயே எப்படிக் கைவிட முடியும்? முந்தைய அரசு முறையான ஆய்வுகளை நடத்தி அனைத்து முடிவுகளையும் இறுதி செய்த பிறகு, அந்தக் குறிப்பிட்ட இடம் சாத்தியமற்றது என்று புதிய அரசு எப்படிக் கூற முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் திட்டத்தைக் கைவிட்டதற்கான தொழில்நுட்ப ரீதியான காரணங்கள் குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *