சென்னை, நவ.20 தமிழ்நாட்டில் கால நிலை மாற்றத்தால், டெங்கு கொசுக்கள் பெருக்கம் அடைந்து சென்னை, தென்காசி, கோவை, திருநெல்வேலி உட்பட, பல்வேறு மாவட்டங் களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இந்த ஆண்டில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 30,000அய் நெருங்கி உள்ளது. அதேநேரம், டெங்குக் காய்ச்சல் எண்ணிக்கை குறையாமல், தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, நாள்தோறும் 200க்கும் மேற் பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை காரணமாக, நன்னீரில் வளரக்கூடிய, ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகரித்து உள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது, 400 ஆக இருந்த நாள்தோறும் பாதிப்பு, 200 ஆக குறைந்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில், ஓரளவு டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
