திருச்சி, ஏப்.28-கல்வித் துறையில் சிறப்பாக செயலாற்றும் கல்வியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் அருந்தமிழ்ச் சங்கம் என்ற அரசு பதிவு பெற்ற அமைப்பு திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களுக்கு மருந்தியல் துறையில் கடந்த 37 ஆண்டு சிறப்பான கல்விச் சேவையினை பாராட்டி சிங்கப் பெண் விருதினை 26.04.2026 அன்று அரக்கோணத்தில் நடைபெற்ற மகளிர் நாள் விழாவில் வழங்கி சிறப்பித் துள்ளது.
இந்நிகழ்வில் பெங்களூரு உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் சியாமளா சந்தீப் மற்றும் அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்
ச.கவு.கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ் புரவலர்கள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள், மருத்துவர்கள், வழக் குரைஞர்கள் மற்றும் அருந்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் பாப்ஜி சந்தர், நெறியாளர் கேத்ரின் இமாகுலேட் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

