”பிச்சை எடுக்கலாம் வாங்க!” அழைக்கும் ஆதீனம்

1 Min Read
- Advertisement -

சமூகவலைத் தளங்களில் உலவிக்கொண்டிருந்த போது திடீரென அந்த விளம்பரம் கண்ணில் பட்டது. தம்மரிஷி சாயல்குடி ஆதீனம் வழங்கும் பிச்சை எடுக்கும் பயிற்சி! அடடே! இது புதுசா இருக்கே என்று அந்த இணைப்பைப் பின்தொடர்ந்தேன்.

மனுஸ்ருமிதி சன்னியாச உபநிடதம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி தமிழர்கள் கடின உழைப்பில் கோடீஸ்வரராக இருந்தாலும் பிச்சை எடுங்கள் என்கிறது சத்தமில்லாமல் சந்தடி சாக்கில் ஸநாதனம்!

சரி பிச்சை எடுப்போம்! என முடிவு எடுத்து வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டபோது 18 நபர்கள் சேர்ந்த பிறகு அழைக்கிறோம் என்றார்கள். பிச்சை எடுப்பதற்கான தகுதிகள் சொத்து மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்க வேண்டுமாம். மாத வருமானம் 80,000 இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும் சொத்து பத்து உள்ளவர்களை மாதம்தோறும் அமாவாசை அன்று ஏதாவது ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைப்பார்களாம்!

அவர்கள் அதற்கு கூறிய காரணம், பிச்சை எடுப்பது அகந்தையை குறைக்கும் பற்றின்மையை வளர்க்கும் என்று கூறி வடக்கிருந்து வேறொரு வடிவில் வந்து நிற்கிறார்கள்!

தமிழர்களின் பொருளாதார வளத்தை ஆன்மிகப் புரட்டுகளை காட்டி சூறையாடத் திட்டமிடும் ஸநாதனக் கும்பலின் சதியை புரிந்து கொள்வோமென்று தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் மேடை தோறும் முழங்கிடும் முழக்கமும், தந்தை பெரியாரின் தத்துவ சிந்தனையும் வழிகாட்டிட அந்த இணைப்பைத் துண்டித்தேன்.

– பெரியார் குயில்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *