திருச்சி, ஆக. 11- திருச்சி மாவட்டம், கூத்தூர் ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில், பழைமையான சுட்ட செங்கற்களாலான கட்டட எச்சங்கள், கல் தூண்கள் தென்படுகின்றன. இரண்டு அடி நீளமும், 1 அடி அகலமும் கொண்ட பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள், களிமண் பூச்சு கொண்டு பிணைக்கப் பட்டுள்ளன.
இவை, தற்கால செங்கற் களை விட, 5 மடங்குப் பெரியதாக உள்ளன. இந்த செங்கற்களில், ‘ய’ வடிவக் குறியீடுகளும் காணப் படுகின்றன. கட்டட சுவர்களுடன் சேர்த்து, பழங்கால கல் தூண்கள், தடிமனான கருப்பு நிற பானைகள் மற்றும் ஓடுகள் மண்பாண்ட எச்சங்கள் காணப்படுகின்றன.
கரிகால சோழன் கல்லணையைக் கட்டிய போது அதனுடன் தொடர்புடைய அமைப் பாகவோ, படகுத் துறையாகவோ, வழிபாட்டுத் தலமாகவோ, படைவீரர்கள் தங்கும் முகாமாகவும் இருந்தி ருக்கலாம் என, அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அந்த இடத்தை, வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
