அயப்பாக்கம், நவ.19- ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடிக் குடியிருப்பு வளாகத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுந்தர விநாயகர் கோயிலை அகற்ற குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவடி தாசில்தார், வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (18.11.2026) காலை கோயிலை இடிக்கச் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கோயில் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவி ஆணையர் சம்பத் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தினர். இதையடுத்து இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
பாதையை ஆக்கிரமித்த விநாயகர் கோயில் இடிப்பு!
Leave a Comment
