இன்னுமா கடவுள் நம்பிக்கை? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி மேலும் ஒருவர் கைது

1 Min Read

மதுரை, ஆக.9- மதுரை மீனாட்சி சுந்த ரேசுவரர் கோயில், அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில் புதுக் கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவ ணங்கள் மூலம் பட்டா பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் காவல் துறையினர் விசாரணையில் 2016-ஆம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் தாசில்தார் அன்பழகன், அந்த சொத் தின் மீதான கோயில் பெயரை நீக்கி ராமாயி ஆயியார் உள்ளிட்ட 9 பேரின் பெயரில் சட்ட விரோ தமாக பட்டா மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார்.

இதற்கிடையே அன்ப ழகன் பதவி உயர்வு பெற்று ராம நாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக நில எடுப்பு பிரிவில் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றினார். அவ ரிடம் தனிப்படை காவல் துறையினர் விசா ரணை நடத்தி கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக் கல் சிறுமலையை சேர்ந்த காளிக்குமார் உள்பட 3 பேர் மோசடியாக கூட்டுச்சதியில் ஈடுபட்டு வட மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நில அடமான பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசா ரணை நடத்தி காளிக் குமாரை நேற்று (8.8.2026)கைது செய்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *