குளறுபடிகள் காரணமாக புதிய கடன் பெற முடியாமல் தவிக்கும் தமிழ்நாடு விவசாயிகள்

- Advertisement -

சென்னை, நவ.19- வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி இதுவரை முறையாக செய்யப் படாததால், புதிய கடன்களைப் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் அறிவித் திருந்தார்.

தவெக அரசு பொறுப் பேற்றதும் ரூ.50 ஆயிரம் வரை யிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், நடப்பாண்டு விவசாயக் கடன் பெறுவதற்காக மாவட்டம் வாரியாக வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் விண்ணப்பித்தனர்.

ஆனால், புதிதாக கடன் வழங்குவதற்கான அரசாணை இதுவரை வரவில்லை எனக்கூறி, கூட்டுறவு சங்க அலுவலர்கள், விண்ணப்பத்தை மட்டும் வாங்கி வைத்தனர். ஏற்கெனவே கடன் உள்ளவர்கள் புதிய கடன் வாங்க வழியில்லாமல் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், சாகுபடி செலவுக்கு பணமின்றியும், கடன் தொகையில் 10 சதவீதம் வழங்கப்படும் ரசாயன உரமும் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை கடன் வழங்கப்படாததால் வேளாண் பணிகளைத் தொடரமுடியவில்லை..

இதுகுறித்து, வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறும்போது, “பயிர்க்கடன் வழங்குவதில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளோம்.

பயிர்க்கடன் தள்ளுபடி நடைமுறையில் உள்ளதால், பழைய கடன் தொகையை விவசாயிகள் கட்ட முன் வரவில்லை.

கடன் தள்ளுபடி உச்ச வரம்பான ரூ.75 ஆயிரம் குறித்த அரசாணை கடந்த வாரம்தான் மாவட்டம் வாரியாக வந்துள்ளது.

ஏற்கெனவே விவசாயிகள் பெற்ற கடன் தொகை, தள்ளுபடி விவரங்களை கணக்கிட்டு வருகிறோம். அடுத்தகட்டமாக கடன் தள்ளுபடி செய்த பின்னர், நடப்பாண்டு வேளாண் கடன் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும். அதன்பிறகே கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

குமரி மாவட்ட வேளாண் பாசன தலைவர் வின்ஸ் ஆன்றோவிடம் கேட்டபோது, “கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்கும் முறையில் நடப்பாண்டு பெரும் குளறுபடியில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

இது குமரி மாவட்டம் போன்ற குறைந்த வேளாண் பரப்புகள் கொண்ட மாவட்டங்களைவிட அதிகமான விவசாய நிலங்கள் கொண்ட டெல்டா மாவட்டங் களில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே பயிர்கடன் தள்ளுபடியை முறையாக மேற்கொண்டு விவசாயிகளுக்கு நடப்பாண்டுக்கான கடனை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *