டைட்டனுக்குப் பயணிக்க விண்ணப்பியுங்கள்!

2 Min Read
- Advertisement -

மகேஸ்வரன் ப

அறிவியல் அரங்கம்

ஆம். விண்வெளி வீரர்கள், விஞ்ஞானிகள் மட்டுமல்ல. நாமும் டைட்டனுக்குப் பயணிக்க  அமெரிக்காவின் நாசா விண்வெளி மய்யம் ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

ஆனால், இப்பயணத்தில் விண்வெளிக் கலத்தில் யாரும் பயணிக்கப் போவதில்லை. இப்பயணத்திற்குப் பதிவு செய்யும் அனைவருடைய பெயர்களைத் தாங்கியபடி விண்கலம் 2028இல் பயணத்தைத் தொடங்குகிறது.

டிரேகன்ப் ஃபிளை (Dragon fly) எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தில் சனிக் கோளின் 293 நிலவுகளுள் ஒன்றான டைட்டனுக்கு தனியங்கி சூழலூர்தி  (Rotor craft) அனுப்பப்படுகிறது. இது ஆக்டோகாப்டர் (Octacopter) வகையைச் சார்ந்தது. இது தானாகப் பறந்து அறிவியல் சோதனைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. பல்வேறு நவீன படக்கருவிகள் மூலம் இது சாத்தியமாகும்.

இதுவரை பிற கோள்கள், வால் நட்சத்திரங்கள், டைட்டன் உள்பட சூரிய குடும்பக் கோள்களின் துணைக் கோள்களுக்கு அனுப்பப்பட்ட ஆய்வூர்திகளில் இது மிக புதுமையானதாகும். வேகமான மோதினாலும் செயல்படும் வகையிலும், டைட்டனின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் அதிக உராய்வு வெப்பத்தை தாங்கும் வகையிலும், குறிப்பாக தரை இறங்கும் ஒரு இடத்தில் மட்டும் ஆய்வு செய்யாமல் சில மைல் தூரம் வரை பல இடங்களில் தானே மாற்றி மாற்றி பறந்து ஆய்வு செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது.

இத்திட்டம் தற்போது ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை கட்டத்தில் உள்ளது.

இவ்விண்கலம் 2028 ஜூலையில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. டைட்டன் நிலவை அடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்யும் இத்திட்டத்தில் ஆய்வுகளை முடித்து விண்கலம் 2034இன் இறுதியில் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வருக்கும் அனுமதிச் சீட்டை நாசா அவரவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்களை பதிவு செய்வதற்கான கடைசி நாள் தைப்பொங்கல் நாளான ஜனவரி 15, 2027 ஆகும். இதில் பதிவு செய்யும் ஒவ்வொரு பெயரும் ஒரு சிலிக்கான் குறுந்தகட்டில் எண்ம முறையில் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்தப் பயணத்தில் இணைய https://my.nasa.gov/specialevents/s/send-your-name-with-dragonfly இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.

ஆய்வின் நோக்கம்

சூரியக் குடும்பத்தில் உள்ள நிலவுகளுக்குள் இரண்டாவது மிகப்பெரிய நிலவான இது  பல்வேறு வகையில் பூமியின் உயிர் வாழ்தலுக்கான சூழலை ஒத்து இருப்பதால் இங்கும் மனிதர்களின் விண்வெளிக் காலனியை உருவாக்கும் திட்டத்திற்கு ஓரளவு உகந்த இடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உயிரியலுக்கு முந்தைய வேதியல் தன்மைகளை ஆய்வு  செய்வதே இதன் நோக்கமாக உள்ளது. பூமியில் உயிரிகள் உருவாகும் முன் இருந்த நிலையை ஓரளவு பிரதிபலிப்பதாக இதற்கு முன் 1997இல் டைட்டனுக்கு அனுப்பப்பட்ட காசினி (Cassini) விண்கலத்தின் ஹுயூஜென் (Huygen) லேண்டர் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

டிரேகன்ப் ஃபிளை நவீன கருவிகள் மூலம் மேலும் துல்லியத் தகவல்களைத் தருமென எதிர்பார்க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *