8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்வு

1 Min Read

சென்னை, ஜூன் 13 தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. 1.8.2026 அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தேர்வர்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மய்யங்களுக்கு நேரில் சென்று இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195ஐ பணமாகச் சேவை மய்யங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூலை 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.500 கூடுதலாகச் செலுத்திப் பதிவு செய்யலாம். தனித்தேர்வர்கள் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழ், 18ஆம் தேதி ஆங்கிலம், 19ஆம் தேதி கணிதம், 20ஆம் தேதி அறிவியல், 21ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *