டேராடூன், நவ.18 உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத் தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றில் சுமார் 35 பயணிகள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தனர். பேருந்து தெஹ்ரி கர்வால் மாவட்ட மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் 6 பயணிகள் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று, பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்
இதில் காயமடைந்த சுமார் 20 பேர் மீட்கப்பட்டு, ஆம் புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவ மனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். ஆன்மிகப் பயணம் மேற்கொண் டவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
