வெட்டிக்காடு, நவ. 18- 14.11.2026 அன்று பகல் 2:00 மணிக்கு வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவானது மொழி வாழ்த்துடன் தொடங்கியது கணித ஆசிரியை சு.மகேசுவரி மாணவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ் வித்தார். அனைத்து ஆசிரியப் பெருமக்களும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை மாணவர்கள் முன்னிலையில் நடத்திக் காட்டி மாணவர்களை மகிழ்வுறச் செய்தனர்
அவற்றுள் சில நிகழ்ச்சிகளா னவை, நவம்பர்-14 குழந்தைகள் தினமாக கொண்டாடுவதற்கான காரணத்தை தமிழ் ஆசிரியர் எடுத்துக் கூற பிற, ஆசிரியர்கள் நடனம், பாட்டு, கதை புதிர், நகைச்சுவை, நாடகம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டி மாணவர்களுடைய பாராட்டைப் பெற்றனர் மாணவர்களும் இன்புற்று மகிழ்ந்தனர்.
இறுதியாக அறிவியல் ஆசிரியை ப.செந்தாழைச்செல்வி நன்றி நவின்றார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு (கடலை மிட்டாய்) வழங்கி நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது.
