மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களைத் தனிப்பட்ட முறையில் யாருடனும் பகிர்ந்துகொள்ளக் கூடாது! மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் அறிவுரை

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 18- மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை தனிப்பட்ட முறையில் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என கணக்கெடுப்பாளர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் பி.சந்திரமோகன் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் சார்பில் கணக்கெடுப்பு முதன்மை பயிற்சியாளர் களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் 16.11.2026 அன்று தொடங்கியது.

இம்முகாமை தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையரும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநில ஒருங்கிணைப்பு அலுவலருமான பி.சந்திரமோகன் தொடங்கிவைத்து பேசியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது முதல்முறையாக 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.

கணக்கெடுப்பாளர்கள் பதிவுசெய்யும் ‘இன்புட்’ உள்ளடக்கத்துக்கு ஏற்பவே ‘அவுட்புட்’ கிடைக்கும். தகவல்களின் துல்லியம் மிகவும் முக்கியமானது.

எனவே, இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், 2-ஆம் கட்ட கணக்கெடுப்பு பணியில் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டியிருக்கும்.

எனவே, கணக்கெடுப்பாளர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். தகவல்களை தனி்ப்பட்ட முறையில் யாருடனும் பகிரக்கூடாது. வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எம்.சுந்தரேஷ் பாபு பேசியதாவது: ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல்கட்ட பணியின்போது பொதுமக்களிடம் 33 விதமான கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

2-ஆம் கட்ட களப்பணி ஜன.25 முதல் பிப். 28 வரை நடைபெற உள்ளது. இதில் 40 கேள்விகளுக்கு பொதுமக்கள் விவரங்களை அளிக்க வேண்டும்.

இந்தக் காலக்கட்டத்தில் தகவல்களை அளிக்க தவறியவர்களுக்கு மார்ச் 1 முதல் 5 வரை கால அவகாசம் அளிக்கப்படும். இந்த 4 நாள் பயிற்சி முகாமில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 முதன்மை பயிற்சியாளர்களுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேருக்கு்ம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இவர்கள் மூலம் 3 ஆயிரம் களப் பணியாளர்களுக்கும் அவர்கள் மூலமாக 1.4 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், 20 ஆயிரம் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் ஜாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான கேள்விகள் இடம்பெறுவதால் கணக்கெடுப்பாளர்கள் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *