தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பாம்! ஒன்றிய அரசு முடிவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, பிப்.5- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

சுங்கச் சாவடிகள்

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆணையம் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதுடன், சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வருகிறது. இதில் தமிழ்நாட்டிலுள்ள 72 நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளும் அடங்கும்.
இந்த 72 சுங்கச் சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.26,000 கோடியை சுங்கக்கட்டணமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த இரு ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் புதிதாக அமைக்கப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயரும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *