வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடு: தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகுவாரா? ‘இண்டியா’ கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

- Advertisement -

புதுடில்லி, நவ.17  நாடு முழுதும் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையத்திடம் 48 கேள்விகளை கேட்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில், ‘இண்டியா’ கூட்ட ணிக் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளன.

எஸ்.அய்.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷியின் ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தா மல், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்.அய்.ஆர்., தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்ததாக தகவல்கள் வெளியாயின.

இதனால், இந்த விவகாரம் பெரிதான நிலையில், ஒரு புறம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்திடம்
48 கேள்விகள்!

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக, 48 கேள்விகளைக் கேட்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் வெறும் கருத்துகளை மட்டுமே தேர்தல் ஆணையம் பதில் மனுவாக தாக்கல் செய்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் யெத்துரு ஆகியோர் 48 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டிருப்து என்ன?

இது தொடர்பாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எஸ்.அய்.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாடு முழுதும் மேற்கொள்ள எப்போது முடிவு எடுக்கப்பட்டது? எந்த அதி காரப்பூர்வ நடைமுறையின் கீழ் இம்முடிவு எடுக்கப்பட்டது? இந்த கேள்விக்கான விடைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

கடந்த 2025 இல் நாடு தழுவிய அளவில் எஸ்.அய்.ஆர்., நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, ‘அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லை’ என பதிலளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கம் முரண்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு எஸ்.அய்.ஆர்., உத்தரவு தொடர்பான கோப்பு எண், தேதி மற்றும் ஆணையர்கள் ஒப்புதல் அளித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

கடந்த 19.2.2025 முதல், 26.9.2026 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், எஸ்.அய்.ஆர்., ‘இசிஅய்நெட்’, எனப்படும், தேர்தல் ஆணையத்தின் இணைதளம், படிவம் 6 அல்லது மேல்முறையீடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி இருவரும் எழுத்துப்பூர்வமாக எத்தனை முறை தங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் ஆணையர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம் 2023, பிரிவு 18(2)இன் கீழ் பெரும்பான்மை அடிப்படையில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டதா என்பதையும் விளக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் எத்தனை முறை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது?

வாக்காளர் பட்டியல் தரவுதளத்தில், பெயர்களை சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது? தனியார் ஒப்பந்த தாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதா? ‘இசிஅய்நெட்’ தளத்தில் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றமும், உரிய அதிகாரியின் உத்தரவு, தேதி மற்றும் நேரத்துடன் பதிவிடப்படுகிறதா?

இணைய வழிப் (‘ஆன்லைன்’) படிவம் 6 நடைமுறையில், புதிய உறுதி மொழி சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த நடைமுறை காரணமாக எத்தனை விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்டன? மேற்கு வங்கத்தின் நீதித்துறை அதிகாரிகள் வாக்காளர்களை சேர்க்க பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எத்தனை மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது?

இவ்வாறு அதில் கூறப்பட்டு
உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *