யுபிஅய் வணிகப் பரிவர்த்தனைக்கான 0.4 சதவீதம் கட்டண வசூல் நடைமுறை தள்ளிவைப்பு!

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 15- யுபிஅய் வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவில் யுபிஅய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இச்சேவையை நாடு முழுவதும் 55.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கூகுள் பே, போன் பே, பேடிஎம், பீம், அமேசான் பே உள்ளிட்ட யுபிஅய் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

இதனிடையே கடந்தமாதம் 14-ஆம் தேதி தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஅய்), ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. இதன்படி ரூ.2,000 வரையிலான வணிக யுபிஅய் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000-க்கு மேல் ரூ.300 கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும்.

இதில் சிறு வணிகர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்படும். மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை யுபிஅய் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வணிகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று என்பிசிஅய் விளக்கம் அளித்தது. நாடு முழுவதும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் யுபிஅய் வணிக பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் (13.10.2026)  வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

யுபிஅய் உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் 13.10.2026 அன்று நடைபெற்றது. வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு யுபிஅய் வணிக கட்டண நடைமுறையை தள்ளிவைக்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தீபாவளிப் பிறகு வணிக யுபிஅய் கட்டண வசூல் நடைமுறை அமலுக்கு வரும். இதுதொடர்பான தேதி பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய நிதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: யுபிஅய் பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ள கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசு ரூ.8,276 கோடியை செலவு செய்துள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது. தற்போது 55.5 கோடி பேர் யுபிஅய் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.

தசரா, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் கட்டண வசூல் நடைமுறையை தள்ளி வைக்க வர்த்தக, தொழில் சேம்பர் கோரிக்கை விடுத்தது. இதையேற்று கட்டண வசூல் நடைமுறை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *