
பெரியார் பெருந் தொண்டர் வை.வரதராசன் அவர்களின் துணைவியாரும், வ. கருப்பு (எ) வீரமணி (வெல்டிங்) வ.இராசராசன், வ.எழில்ராணி, வ.தமிழ்ச்செல்வி, வ.அன்புக்கரசி -ஆகியோரின் தாயாருமான “வ.வசந்தா ” ( வயது – 82 ) 8-11-2026 அன்று மறைவுற்றார். அவர்களது இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வரதராஜன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மறைந்த பெரியார் பெருந்தொண்டர் துரைராஜனின் வாழ்விணையர் அவர்களையும் நலம் விசாரித்தார். உடன்: சாலியமங்கலம் ராஜேந்திரன், தம்பிதுரை (15-11-2026, சாலியமங்கலம்)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம் இராமச்சந்திரன் (எம் .ஆர்) அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது வாழ்விணையர் மற்றும் மகள் டாக்டர் அபிராமி, மருமகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து, எம்.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர்செ. தமிழ்ச்செல்வன், மாவட்டக் காப்பாளர் மு. அய்யனார், பின்னையூர் கோவிந்தராஜ் மற்றும் உறவினர்கள் உள்ளனர். (14.11.2026, தஞ்சாவூர் )
