புதுடில்லி, நவ. 16– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட் டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத் தொடரில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு முனைப் புடன் உள்ளதாகவும் அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிர் இடஒதுக் கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதி களின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆம் திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப் பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் அது தோல்வியடைந்தது.
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20.7.2026 அன்று தொடங்கி 13.8.2026 வரை நடைபெற்றது. இதையடுத்து, இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. அதேநேரம், 90 நாள்களுக்கு மேலாகியும் இக் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் இன்னும் வெளியிடவில்லை. இதனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவரும் வகையில், மழைக்கால கூட்டத் தொடரின் நீட்டிக்கப்பட்ட அமா்வை ஒன்றிய அரசு நடத்தக் கூடும் என்ற ஊகங்கள் நீடிக்கின்றன.
இந்தச் சூழலில், டிசம்பா் முதல் வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடா் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தேதிகள் குறித்து உயா்நிலை ஆலோ சனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று (15.11.2026) தெரிவித்தன.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு முனைப்புக் காட்டி வரும் நிலையில், தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் (3 காலி யிடங்கள் தவிர்த்து 540) மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 உறுப்பினர்கள் உள்ளனா். எனவே, எதிர்க்கட்சி உறுப் பினர்களின் ஆதரவும் அவசியமாகும்.
மக்கள்தொகை அடிப்படை யிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொருபுறம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆா்) விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக இண்டியா கூட் டணிக் கட்சிகள் தீவிர எதிர்ப்பை கடைப்பிடித்து வருவதால் கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
