எடின்பர்க், நவ 16- மிகப்பெரிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மய்யங்களின் (Data Centers) அதிவேகக் கட்டுமானத்திற்கு எதிராக அய்ரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடு களில் இந்த மாதம் அடித்தட்டு மக்களின் போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன. இத்தகைய மய்யங்கள் உள்ளூர் மின் விநியோகக் கட்டமைப்புகள், நீர் இருப்பு மற்றும் பசுமைப் பகுதிகளைப் பெருமளவில் உறிஞ்சுவதாக உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித் துள்ளனர்.
கடந்த நவம்பர் 14-ஆம் தேதி யன்று, 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் எடின்பர்க் நகரின் ராயல் மைல் (Royal Mile) வழியாக ஸ்காட்லாந்து நாடாளு மன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஸ்காட்லாந்து முழுவதும் அமைக்கப்படவுள்ள மெகா தரவு மய்யத் திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 80-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூர் ஆர்வலர்களின் ஆதரவுடன் நடை பெற்ற இப்போராட்டத்தில், முன் மொழியப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, டம்ஃப்ரைஸ் மற்றும் காலோவே (Dumfries and Galloway) பகுதியில் உள்ள சாப்பல்கிராஸில் (Chapelcross) அமையவுள்ள 1,000 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்டத் திட்டம் கடுமை யாக எதிர்க்கப்பட்டது; இது ஸ்காட்லாந்தில் தற்போதுள்ள மிகப்பெரிய 12 மெகாவாட் மய்யத்தை விடப் பல மடங்கு பெரிய தாகும். 12,000 பேர் கையொப்பமிட்ட மனுவை நகர அதிகாரிகளிடம் வழங்கிய போராட்டக்காரர்கள், 24 மணி நேரமும் இயங்கும் செயற்கை நுண்ணறிவு சேவையகப் பண்ணைகள் (Server farms) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும் என்றும், தொடர்ந்து குறைந்த அதிர்வெண் கொண்ட இரைச்சலை உருவாக்கி, காலநிலை இலக்குகளைச் சீர் குலைக்கும் என்றும் வாதிட்டனர்.
இத்திட்டங்கள் முக்கியமான பொருளாதார உள்கட்டமைப்பு என ஸ்காட்லாந்து கருதினாலும், பெரிய அளவிலான மய்யங்களுக்குக் கட்டாயச் சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீடுகளைக் கோரும் கடுமையான திட்டமிடல் வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக ஸ்காட்லாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
