பன்னாட்டு விமானச் சேவைக்கு அனுமதி மறுத்து மதுரை விமான நிலையத்திற்கு அநீதி! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

3 Min Read

புதுடில்லி, பிப்.1 – பன்னாட்டு விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிப்பதிலிருந்து, மதுரையை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது அநீதியானது; அரசியல் காரணங்களை உள்ள டக்கியது என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித் துள்ளார்.

கொள்கை ரீதியாக முடிவெடுப் பதற்குப் பதில், விமான நிறுவனங் களிடம் அறிவுறுத்து கிறோம் என்பது ஏமாற்று வேலை என்றும் நாடாளமன்ற உறுப்பினர்  சு. வெங்க டேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் விமானச் சேவை ஒப்பந்தத்தில் புறக்கணிப்பு!

மதுரை விமான நிலையத்தி லிருந்து கூடுதல் பன்னாட்டு விமானங் களை இயக்குவது மற்றும் ஆசிய நாடுகளுக்கான (ASEAN) விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது குறித்து மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், கடந்த 2025 நவம்பர் 21 அன்று, ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு வுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், “சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 11 ஆசி யான் (ASEAN) நாடுகளுடன் கையெ ழுத்திடப்பட்டுள்ள இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் உள்ள 18 சுற்றுலா நகரங்களின் (Point of Call – POC) பட்டியலில் மதுரை விமான நிலையத்தையும் இணைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

சுற்றுலா நகரங்கள்
பட்டியலில் இடம்மறுப்பு

“இவ்வாறு எடுக்கப்படும் நட வடிக்கை, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடியாக விமானங்களை இயக்க வழிவகுக்கும். தற்போது தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மட்டுமே இந்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் காரண மாக, ‘ஏர் ஆசியா’, ‘பாட்டிக் ஏர்’, ‘சில்க் ஏர்’ போன்ற  நிறுவனங்கள் ‘திறந்தவெளி வானக் கொள்கை யின்’ (Open Skies Policy) கீழ் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அங்கு விமானங்களை இயக்கி வருகின்றன.

அவுரங்காபாத்திற்கு
அனுமதி அளித்தது எப்படி?

பன்னாட்டு விமான நிறுவனங் கள், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு விமானங்களை இயக்க அனுமதி கோரி வரு கின்றன. ஏப்ரல் 2013-இல், சிங்கப்பூர் விமான நிறு வனங்கள் மதுரைக்கு விமானங்களை இயக்க ஏதுவாக, மதுரையையும் புனேவையும் கூடுதல் விமான நிலையங்களாக (Points of Call) அங்கீகரிக்கக் கோரி சிங்கப்பூர் அரசு விடுத்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்திய அரசு இதனை ‘கொள்கை முடிவு’ எனக் கூறிதொடர்ந்து மறுத்து வருகிறது.

பன்னாட்டு விமானங்களை இயக்கத் தொழில் நுட்ப ரீதியாகத் தகுதியற்ற கஜுராஹோ போன்ற உள்நாட்டு விமானநிலையங்களும், கடந்த 15 ஆண்டுகளாக ஆசியான் நிறுவனங்களால் ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத (Zero-Utilisation) அவுரங்காபாத், போர்ட் பிளேயர் போன்ற விமான நிலையங்களும் இந்தச் சிறப்புப் பட்டியலில் நீடிக்கின்றன.

மதுரையைப் புறக்கணிக்கக் காரணம் என்ன?

ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஆழமான கலாச்சார மற்றும் வணிகத் தொடர்புகளைக்கொண்ட, அதிக தேவையுள்ள மதுரை விமான நிலையம் இந்தப்  பட்டியலில் புறக்கணிக்கப்படுவது ஏன்?” என்று  நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் கிஞ்சராபு நாயுடு பதிலளித்துள்ளார்.  அதில், “தற்போதைய நிலையே தொடரும் என்றும், இந்தக் கொள்கை ஒருமுறை எடுக்கப்பட்ட முடிவு என்பதால் மதுரையைச் சேர்ப்பதற்காக மாற்றி யமைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பன்னாட்டு விமானச் சேவைகளைத் தொடங்குவது என்பது முழுக்க முழுக்க விமான நிறுவனங்களின் வணிக ரீதியான முடிவாகும். பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இருப்பு மற்றும் பொருளாதார ரீதியான லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே நிறுவனங்கள் இதனைத் தீர்மானிக்கின்றன. இதில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை.

தனியாரிடம் கோரிக்கை என்பது சமாளிப்பு வேலை

இருப்பினும், மதுரையின் முக்கியத்துவத்தைக் கருதி, அங்கிருந்து பன்னாட்டு விமானச் சேவைகளை விரிவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அனைத்து இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் (Indian Carriers) ஒன்றிய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது” என்று அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைச் சுட்டிக்காட்டி, சு. வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய அரசுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு விமானச் சேவைக்கான விமான நிலையமாக அறிவிக்கும் விஷயத்தில், கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு, வெறும் அறிவுரை கூறுவதும், விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கையாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *