சர்வாதிகாரிகள் உண்மையைச் சிதைக்கிறார்கள் டிரம்ப்பை மறைமுகமாகச் சாடிய ஆஸ்திரிய அதிபர்!

2 Min Read

வியன்னா, ஏப். 26- “அதிகாரத்தில் நீடிப்பதற்காகச் சர்வாதிகாரிகள் உண்மையைச் சிதைக்கிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளை ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி:
போப் மீதான விமர்சனமும் ஏஅய் ஒளிப்படமும்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கத்தோலிக்க மதத் தலைவர் 14ஆம் போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய டொனால்ட் டிரம்ப், “போப் லியோ குற்றச்செயல்கள் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருக்கிறார்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் தன்னை இயேசு கிறிஸ் துவைப் போல சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) ஒளிப்படத்தைத் டிரம்ப் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில், நீண்ட அங்கிகளுடன் இருக்கும் டிரம்ப், நோயுற்ற ஒருவரை ஆசீர்வதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்திரிய அதிபரின்
கடும் கண்டனம்

டிரம்பின் இந்தச் செயலைக் குறித்து வியன்னாவில் செய்தி யாளர்களிடம் பேசிய ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் தெரிவித்ததாவது:

“இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் யார் வேண்டுமானாலும் தங்களை இயேசுவாகவோ அல்லது மருத்துவராகவோ காட்டிக்கொள்ள முடியும். மக்கள் எது உண்மை, எது பொய் என்று கண்டறிய முடியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதே சர்வாதிகாரிகளின் அடிப்படை அரசியல் உத்தி.”

“நம்பத்தகுந்த போலிச் செய்திகள் பெருகி வரும் சூழலில், பாரம்பரியச் செய்தி ஊடகங்கள் நடுநிலையுடனும் உண்மைக்கு உறுதி யுடனும் செயல்பட வேண்டியது முன்னெப்போதையும் விட இப்போது அவசியம்.”

ஜனநாயகத்தின் அடிப்படை

“உண்மை இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது. எது சரி, எது தவறு என்ற புரிதல் இருந்தால்தான் மக்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க முடியும்.”

தொழில்நுட்பத்தைப் பயன் படுத்திச் சிதைக்கப்படும் உண் மைகள், சமூகத்தின் எதிர்காலத் திற்குப் பெரும் அச்சுறுத்தல்” என்று அவர் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *