புதுடில்லி, நவ. 15- திருப்பரங்குன்றம் தீபத் தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகிலுள்ள தூணில் தான் தீபம் ஏற்றவேண்டும் என- இதுவரை இல்லாதவழக்கத்திற்கு மாறான ஒரு நடைமுறையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திணிக்கப் பார்த்தது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலை முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 24 மணி நேரமும் தூணில் தீபம் எரியவிட வேண்டும் என பொதுநலவழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கி உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கோவிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்; கார்த்திகை தீப நாளன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது; மேலும், தூணில் 24 மணி நேரமும்தீபம் ஏற்றுவது என்பது மரபுக்கு எதிரானது” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ‘நவம்பர் 24 அன்று கார்த்திகை தீபம் நடைபெறவுள்ள நிலையில், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் சங்-பரிவாரங்கள் கலவர முயற்சியில் இறங்கியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மாநில காவல்துறைக்குப் பதிலாக, தங்களுக்கு சாதகமான ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிஆர்பிஎப்படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும் கூப்பாடு போடத் துவங்கியுள்ளனர்.
