சென்னை, நவ. 15- உங்களுக்கு தமிழ்நாட்டின் விவசாயிகள் முக்கியமில்லையா? கூட்டணியை காப்பாற்றக் காவிரியை விலை கொடுக்கப் போகிறீர்களா என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாதுவில் அணை கட்டும் கருநாடகத்தின் முயற்சி, வெறும் பேச்சோடு நிற்கவில்லை. அனைத்து சட்டப்பூர்வ நடவடிக் கைகளையும் முறைப்படுத்தி, முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்குக்கூட காட்டமான பதிலை சொல்ல முடியாமல் பம்மி கிடக் கிறது, டம்மி அரசாங்கம். கருநாடகத்தில் காங்கிரஸ் அரசு. தமிழ்நாட்டில் அதே காங்கிரஸ், ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உக்கிரமாக எதிர்க்க வேண்டிய விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆளும் டம்மி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி என்ன கருநாடகத்தின் குடும்பச் சொத்தா? மேலே இருப்பவர்கள் அணை கட்டுவதும், கீழே இருப்பவர்கள் தண்ணீருக்காக கையேந்துவதும்தான் கூட்டாட்சி தத்துவமா?
கூட்டணி தர்மத்துக்காக தமிழ்நாட்டின் நீர் உரிமை யில் சமரசம் செய்து கொண்டி ருக்கிறதா விஜய் அரசு? கருநாடக காங்கிரஸ் மனம் புண்பட்டுவிட கூடாது என்றுதான் விஜய் மென்மையான போக்கோடு நடந்து கொள்கிறாரா? ’’உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க’’னு திரையில விஜய் பேசிய வசனத்தை கூட தரையில பேச முடியாத கோழையாக இருக்கிறார்.
காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டும் துணிச்சல் முதலமைச்சருக்கு இருக்கிறதா? தமிழ்நாட்டின் நீருரிமையை பறிக்க துடிக்கும் கருநாடக காங்கிரஸ் அரசையும், அதன் முதல்வரையும் எப்படி கையாளப் போகிறார்? சி.எம் சார். உங்களுக்கு முக்கியம் கூட்டணியா? காவிரியா? தமிழ்நாட்டின் விவசாயிகள் முக்கியமில்லையா? கூட்டணியை காப்பாற்ற காவிரியை விலை கொடுக்கப் போகிறீர்களா?
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட தொடர்ந்து முயற்சித்து வரும் கருநாடக முததலமைச்சர் டி.கே.சிவகுமார் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்! பிரதமர் மோடி தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், எங்களது சட்டப்பூர்வமான காவிரி நீருரிமையையும் பாது காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
