கவுகாத்தி, நவ.15- குஜராத்தின் டாரங் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்ச்சான் பேகம். 1983ஆம் ஆண்டின் சட்டவிரோத குடியேறி கள் சட்டத்தின் கீழ் கடந்த 2000ஆம் ஆண்டு குல்ச்சான் பேகத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்த இந்த வழக்கு வெளி நாட்டவர் தீர்ப்பாய முறைக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மங்கள்தாய் பகுதியில் உள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயம் குல்ச்சான் பேகம் கடந்த 1971ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் என்று அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து அவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 5ஆம் தேதி வழங்கிய தனது தீர்ப்பில், “மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் அதாவது தந்தையின் பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவரது சொந்த வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அவரது குடியுரிமைக்கான சான்றுகள் அல்ல. இவை வருமான வரித்துறை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தின் முறையான விசாரணை ஏதுமின்றி விண்ணப்பதாரரின் சுயஅறிவிப்பின் அடிப்படையில் வழங்கப்படுபவை.
இந்த ஆவணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் பிற ஆவணங்கள் நிரூபிக்கப்படாத வரை சமர்ப்பிக்கப்படாதவரை இந்த ஆவணங்களை இந்தியக் குடியுரிமைக்கான சான்றுகளாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று உத்தரவிட்டனர்.
