காணாமல் போன 2,70,300 சிறுமிகள், பெண்கள்

1 Min Read
- Advertisement -

தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன (இரண்டு பெண் குழந்தைகள் உள்பட) நான்கு குழந்தைகள் குன்றத்தூர் அருகே ஏரியில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டனர்!

கடந்த வாரம் திருவண்ணாமலை அருகே விடுதியில் இருந்த நான்கு சிறுமிகள், ஒரு பெண் உள்பட 5 பேர் அங்குள்ள ஏரியில் உயிரிழந்து மிதந்தனர்!

இப்போது கடலூர் அருகே ஒரே வாரத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் அய்ந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள்!

செஞ்சி அருகே காணாமல் போன ஏழு வயது சிறுமி 40 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!

எஃப்ஸ்டீனை மிஞ்சும் ஃபைல்கள் இந்தியாவில் உண்டு! அவை இன்னும் வெளிவரவில்லை என்பது மட்டுமே உண்மை!

அதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்!

2026 பிப்ரவரி 18 அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி:

2020 முதல் 2026 ஜனவரி 28 வரையிலான பாஜக ஆட்சியில் காணாமல்போன பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை 2,70,300! அதாவது ஆண்டுக்கு சராசரியாக சுமார் 55 ஆயிரம் பேர்!

அவர்களில் உயிருடனோ, உயிரற்றோ, வன்கொடுமை செய்யப்பட்ட நிலையிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் போக மீதி 50,170 பேர் இன்று வரை என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை! (புகார் அளிக்கப்பட்ட எண்ணிக்கை மட்டுமே இவ்வளவு! இந்தத் தகவல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்ராந்த் பூரியாவின் கேள்விக்கு அரசு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இடம்பெற்றுள்ளது.)

தமிழ்நாட்டிலும் அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல் எப்படியாவது காப்பாற்றுங்கள்!

– ஊடகவியலாளர் வாசுகி லட்சுமணன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *