கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மேகதாது அணை திட்டத்தை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்த கருநாடகாவின் முயற்சி – அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு; கருநாடகா முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் எதிர்ப்பு. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கருநாடகாவின் முயற்சிக்கு எதிராக, தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவை மீறி அணை கட்ட அனுமதிக்க முடியாது எனத் தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை – மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணியில் ஒற்றுமை பாதிக்கும் அபாயம். சரத் பவார் மற்றும் சுனேத்ரா பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவுகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், சிவசேனா (UBT) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே அரசியல் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த இணைப்பு முயற்சி மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கலாம் என அக்கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* பாஜகவின் தோல்வி உறுதி; அது ஏற்கெனவே முடிவான ஒன்று – வெறுப்பு மற்றும் வன்முறைக்கு பதிலாக அன்பு, ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தின் மூலம் பாஜகவை எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கிக் தொழிலாளர்களை தொழிலாளர்களாக மட்டுமல்ல, கூட்டாளிகளாகவும் காங்கிரஸ் கருதுகிறது – ராகுல் காந்தி. தெலங்கானாவில் கிக் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டதை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். கிக் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு மற்றும் நீண்ட கால சமூகப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர்களின் வருமானம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மக்களவைத் தொகுதிகளை 50% உயர்த்தும் வரையறை மசோதாவுக்கு ஆதரவு – சுப்ரியா சுலே: மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 50% உயர்த்தும் மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆதரவளிக்க தயாராக இருப்பதாக சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படை இன்றி, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தி இந்து:

* எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு சட்டத்தை பாதுகாக்க கருநாடக அரசு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.கல்வி நிறுவனங்களில் எஸ்.சி. பிரிவினருக்கு 17%, எஸ்.டி. பிரிவினருக்கு 7% இடஒதுக்கீடு வழங்கும் கருநாடக சட்டத்தை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க, அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தி டெலிகிராப்:

* 10 மாநிலங்களில் அமைப்பை விரிவுபடுத்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) – மண்டலப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமனம். சி.ஜே.பி. அமைப்பு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்கள் பாஜகவின் அமைதி குறித்த வெற்றுப் பெருமைகளை அம்பலப்படுத்து கின்றன – காங்கிரஸ் தாக்கு.. ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள், அங்கு அமைதி நிலவுவதாக ஒன்றிய அரசு கூறிவரும் கூற்றுகள் பொய்யானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா விமர்சனம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *