தஞ்சாவூர், நவ.15 தஞ்சையில் நேற்று (14.11.2026) முற்பகல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
கழகத் தலைவரின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளை (2.12.2026) கொள்கைப் பிரச்சார விழாவாக நடத்துவது, போராட்ட அறிவிப்பு, புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு உள்பட முக்கிய தீர்மானங்கள் நேற்று (14.11.2026) தஞ்சையில் நடைபெற்ற இரு கூட்டங்களிலும் நிறை வேற்றப்பட்டன. (தீர்மானங்களை நேற்றைய (14.11.2026) ‘விடுதலை’யில் காண்க).
தலைமைச் செயற்குழுக் கூட்டம்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 14.11.2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஓட்டல் ஆதீஸ் பார்க்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கமாக திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி கடவுள் மறுப்பு கூறினார்.
கூட்டத்திற்கு வருகை தந்த கழகப் பொறுப்பாளர்களை கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வரவேற்று உரையாற்றினார்.
இச்செயற்குழுவின் நோக்கத்தினை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகையில் தலைவரின் உடல்நிலை பற்றியும், இயக்கத்தின் அடுத்த நகர்வுகள், திட்டங்கள், கழகத் தலைவர் பிறந்தநாள் பெரு விழா நாடு ழுழுவதும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று கருத்துரை ஆற்றினார்.
தீர்மானங்களை துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் முன்மொழிந்தார்.
பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசுகையில், கடந்த செப்டம்பர் 17 ஆம் நாள் உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கழகத் தலைவர் அறிவித்த திட்டங்களை சிறப்பாக நடத்திய மாவட்டக் கழகத் தோழர்களுக்கு பாராட்டுகளையும், மற்ற மாவட்டத் தோழர்களும் தலைமை அறிவிக்கும் செயல்பாடுகளை முழுவீச்சில் செய்திட அனைவரும் பணியாற்ற வேண்டும் எடுத்துக் கூறினார்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் முனைவர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், ஊ.ஜெயராமன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணா நிதி, திராவிட தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், மகளிரணிச் செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் நன்றி கூறினார். கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றுகையில் தன்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தையும், அறிவாசான் தந்தை பெரியாரின் மாண வனாகவும், அவருக்கு ஆற்றிய தொண்டினையும் உணர்ச்சிப் பெருக்குடன் எடுத்துக்கூறினார்.
எமது பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரி வித்துள்ளீர்கள் விடுதலை சந்தாக்களை திரட்டி அளியுங்கள்.
அதுதான் முக்கியம்; கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறட்டும் என்றதோடு, இந்தக் காலகட்டத்தில் நம்முடைய கொள்கை எதிரிகள் ஏராளம் உள்ளனர். அதனை எல்லாம் சமாளிக்கும் வகையில் பணிகளை வீரியத்துடன் மேற்கொள்ளுங்கள்.
உடல்நிலை கொஞ்சம் சோர்வாகத் தான் உள்ளது. அதிக நேரம் அமரக்கூடிய நிலை இல்லாமல் இருக்கிறது. தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நெகழ்ச்சியுரை ஆற்றி கூட்டத்தினை நிறைவு செய்தார். புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பினையும் அறிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கூட்டத்தில் உரையாற்றிய முனைவர் துரை.சந்திரசேகரன், தனது உடல்நலக் குறைவு காரணமாகவும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், உடல்நலம் சீரான நிலையில், கழகத் தலைவர் ஆணைப்படி, அளிக்கும் பொறுப்பை ஏற்பதாகவும் உருக்கமுடன் கூறினார்.
அதன் நியாயத்தை உணர்ந்து, முனைவர் துரை.சந்திரசேகரன் கூறியதை ஏற்பதாகவும் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவித்தார்.
புதிய பொறுப்பாளர்கள்
கீழ்க்கண்ட புதிய பொறுப்பாளர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்
மாவட்டத் தலைவர் – செ.அ.தர்மசேகர்
மாவட்டச் செயலாளர் – ஓவியர் சி.குழந்தை
காப்பாளர்கள்: மு.அறிவொளி, ப.வீரப்பன்
திராவிடர் கழக மாநில விவசாய தொழிலாளர் அணி புதிய பொறுப்பாளர்கள்
மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் – வீ.மோகன் (வயது 80)
ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் – 1. திருவாரூர் 2.கும்பகோணம்
விவசாய தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் – வி.ஆர்.அறிவுமணி (வயது 36), த/பெ.வி.இராஜேந்திரன்
ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் – 1. நாகப்பட்டினம் 2.மயிலாடுதுறை 3.காரைக்கால் (மருங்கூர், நாகை மாவட்டம்).
விவசாய தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் – வெ.சித்தார்த்தன் (வயது 63)
ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் – 1.இலால்குடி 2.திருச்சி 3.துறையூர் (பெருவளப்பூர், இலால்குடி மாவட்டம்)
விவசாய தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் – அ.அருணகிரி (வயது 60),
ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் – 1.தஞ்சாவூர் 2.மன்னார்குடி 3.பட்டுக்கோட்டை
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல்
14.11.2026 சனிக்கிழமை முற்பகல் 12 மணியளவில் தஞ்சாவூர் ஆதீஸ் பார்க் ஓட்டல் அரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தஞ்சாவூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், வடசேரி திராவிடர் கழகத் தோழர் மெ.இளங்கோவின் தாயார் காசியம்மாள் (வயது 100) அவர்கள் 10.11.2026 அன்று மறைவுற்றார். அவரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. (மறைந்த அம்மையாரின் இரு கண்களும் கொடையாக வழங்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு உடற்கொடை வழங்கப்பட்டது.)
தீர்மானம் 2:
14.11.2026 அன்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3:
‘பெரியார் உலகமயம்! உலகம் பெரியார்மயம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை (சுயமரியாதை நாள்) முன்னிட்டு, குருதிக்கொடை வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது, சுயமரியாதை நாள் பொதுக்கூட்டங்கள், நூல் அறிமுக விழா உள்ளிட்ட நிகழ்வுகளை டிசம்பர் மாதம் முழுவதும் தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் மிகுந்த எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 4:
(டிசம்பர் 2 – சுயமரியாதை நாள்) – விடுதலை சந்தா
‘பெரியாரைப் பேசாத நாள் பிறவா நாள்’ என நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாளான டிசம்பர் 2ஆம் நாள் (சுயமரியாதை நாள்) சென்னையில் நடைபெறும் விழாவில், கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று, நமது தலைவரைச் சந்தித்து, ‘விடுதலை’ சந்தாக்களை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்து மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் 5:
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராகச் சிறப்பாகச் செயல்பட்ட திராவிடர் கழக முன்னாள் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவினை (2027 ஜனவரி 8) தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் தஞ்சாவூரில் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
கூட்டத்தில் உரையாற்றியோர்
செ.தமிழ்ச்செல்வன் எம்.ஏ. (தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர்), திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார் ஆகியோர் உரைக்குப் பின்னர், கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.
தஞ்சை மாநகரக் கழகச் செயலாளர் இரா.வீரக்குமார் எம்.பி.ஏ. நன்றி கூறினார்.
புதிய பொறுப்பாளர்கள்:
கீழ்க்கண்டவர்களைப் புதிய பொறுப்பாளர்களாகத் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்டத் தலைவர் – செ.தமிழ்ச்செல்வன் எம்.ஏ.,
மாவட்டச் செயலாளர் – கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்
காப்பாளர்கள் – மு.அய்யனார், கை.முகிலன்
தஞ்சாவூர் மாநகரத் தலைவர் – இரா.வீரக்குமார் எம்.பி.ஏ.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டமும், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகக் கூட்டமும் எழுச்சியுடன் நடைபெற்றன.
இளைஞரணியினர் பெருமளவில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கதாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது.
