சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை: பிரியங்கா காந்தி

1 Min Read
- Advertisement -

வயநாடு, நவ. 14- தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஒன்றிய அரசு கூட்ட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, எதிர்க்கட்சிகளுக்கு எந்தவித முன்அறிவிப்பும் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். கடந்த 11.11.2026 அன்று தொடங்கிய 4 நாள் சுற்றுப்பயணமாக தனது வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரியங்கா காந்தி பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று (13.11.2026) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிறப்புக் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து ஒன்றிய அரசு எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் திட்டமிட்டிருந்தால், அது குறித்து எனக்குத் தெரியாது; தற்போதைய நிலவரப்படி என்னிடம் எந்தத் தகவலும் இல்லை, ”என்றார். ஒன்றிய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித் துப் பேசிய அவர், மாற்றுக் கருத்துக்களைத் தெரி விப்பவர்களின் குரல் ஒடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

‘‘கடந்த சில மாதங்களாக, எதையாவது சொல்ல விரும்புபவர்கள் அல்லது தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் அடக்கப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் போராடு கிறோம். நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அனைத்து அமைப்பு களையும் பாஜக திட்டமிட்டு அழித்து வரு கிறது” என பிரியங்கா காந்தி சாடினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *