1072 தடவையாக(!) மீண்டும் எடுக்கப்பட்டுள்ள ‘இராமாயணம்’ என்ற திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த பிறகு மீண்டும் ‘புஷ்பக விமானம்’ தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது. இராவணன் சீதையைக் கொண்டு செல்ல பயன்படுத்திய ‘புஷ்பக விமானம்’ உலகில் மனிதர்கள் பயன்படுத்திய முதல் விமானம் என்று பேசத் தொடங்கிவிட்டனர். இதில் தற்போது பேட்டரி குறித்த பேச்சும் எழுந்துவருகிறது
சமூக வலைதளங்களில் ‘அகஸ்திய சம்ஹிதை’ என்ற நூலை மேற்கோள் காட்டி, அகஸ்தியர் தாமிரத் தகடு, துத்தநாகம், மரத்தூள் மற்றும் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்தார் என்றும், அதற்கான வரைபடம் என்றும் ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
மின்சார பேட்டரி கி.பி.1800 இல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த அலெ ஸாண்ட்ரோ வோல்டா என்பவரால் கண்டு பிடித்து பயன்பாட்டிற்கு வந்தது.
அகஸ்தியர் பேட்டரி எனக் கூறப்படும் குறிப்புகள் அடங்கிய ‘அகஸ்திய சம்ஹிதை’ என்ற ஓலைச்சுவடி குறித்து தொல்லியல் மற்றும் அறிவியல் ஆய்வுகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போலி யாக எழுதப்பட்டவை என்று உறுதி செய்துள்ளன.
இராமாயணத்தில் வரும் இராவணனின் ‘புஷ்பக விமானம்’ பரத்வாஜரின் ‘விமானிக சாஸ்திரம்’ ஆகியவை பண்டைய இந்தியாவின் வான்வழித் தொழில்நுட்பத்திற்குச் சான்றாக முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இதையும் பெங்களூரு ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் ஆய்வு செய்து ‘விமான சாஸ்திரம்’ என்று கூறும் நூல்கள் எல்லாம் குப்பை என்று ஒதுக்கி விட்டது.
பண்டைய இலக்கியங்களில் உள்ள கற்பனைத்திறனை ரசிப்பதற்கும், அதை அறிவியல் உண்மையென நம்புவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. அறிவியல் என்பது சோதனைகள், கணக்கீடுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இயங்குவது; புராணக் கதைகளின் அடிப்படையில் அல்ல; தொழில்நுட்ப வளர்ச்சியை மூட நம்பிக்கை களைப் பரப்பப் பயன்படுத்தாமல், பகுத்த றிவை வளர்க்கப் பயன்படுத்துவதே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இந்த இராமாயணம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வெளிவர உள்ளதாம்! அநேகமாக இரண்டாம் பாகத்தில் ‘அகஸ்தி யரின் பேட்டரி மூலம் விமானம் இயங்குகிறது’ என்று கூறினாலும் கூறுவார்கள்.
இதையும் நம்புவதற்குப் பெரும் கூட்டத்தை வடக்கே தயார் செய்து விட்டார்கள் .
அகத்தியர் என்பவர் கும்ப யோனியில் (குடத்தில்) பிறந்தவராம். வருணன் மற்றும் மித்ரன் ஆகிய தேவர்களின் வீரியம் ஒரு நீர்க் குடத்தில் (கும்பம்) விழுந்ததாகவும், அதிலிருந்து அகத்தியர் பிறந்தாராம்.
அய்யய்ய! இந்தப் புராண ஆபாசக் கற்பனைக்காரர், விமானம், பேட்டரிகளைக் கண்டுபிடித்தாராம்! தலையில் அடித்துக் கொள்ளுங்கள்!
