நடப்பது ஹிந்து முன்னணி ஆட்சியா? தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஜாதிப்பெயர் சொல்லித் தாக்கிய ஹிந்து முன்னணிப் பிரமுகர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல்துறை

- Advertisement -

உதகை, நவ.13 பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும் பத்தினரை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்தித் தாக்கியதாக, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக  தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த குடும் பத்தினரை அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஜாதிப் பெயரைச் சொல்லித் தகாத வார்த் தைகளால் திட்டியதோடு, கிரிக்கெட் மட்டை மற்றும் இரும்புக் கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்

இந்தத் தாக்குதலில் படுகாய மடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, முதலில் எமரால்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறை மெத்தனம்

இச்சம்பவம் குறித்து பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் புகாரின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய் யாமல் காலம் தாழ்த்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மனமு டைந்த அருணா, மருத் துவமனையில் சிகிச்சை பெற்றபடியே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், காவல் துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் வேதனையுடன் பேசி காட்சிப் பதிவு ஒன்றை வெளி யிட்டார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி  பொது மக்கள் மற்றும் சமூக ஆர் வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

8 பேர் மீது வழக்குப்பதிவு

காட்சிப் பதிவு பரவ லானதைத் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, எமரால்டு காவல்துறையினர் தற்போது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப் பட்டச் சமூகத்தினரை ஜாதிப்பெயரைச் சொல்லித் திட்டித் தாக்கியதாக இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள் ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தில் காவல் துறையின் ஆரம்ப கட்ட மெத்தனப் போக்கைக் கண்டித்துள்ள சமூக ஆர்வலர்கள், குற்ற வாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *