108 ஆம்புலன்ஸ் சேவையில் அழைப்பவரின் இருப்பிடத்தைத் தானாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

- Advertisement -

சென்னை, நவ.13- அவசர கால சேவையை துரிதப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இனி 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப் பவர்கள் தாங்கள் இருக்கும் முகவரியைத் தேடி தவிக்க வேண்டிய அவசியமில்லை. தொழில் நுட்பத்தின் உதவியுடன் அழைப்பவரின் இருப்பிடத்தை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தானாகவே கண்டறியும் புதிய முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த அசத்தலான மாற்றத்தின் மூலம் அவசர கால ஆம்புலன்ஸ் சேவைக்கான பதிலளிக்கும் நேரம் 3 நிமிடங்கள் வரை குறையும் என்று துறைசார்ந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட தீவிர சோதனைகளில், கட்டுப்பாட்டு அறையை அழைப்பு அடைந்த உடனேயே அந்த அமைப்பு சுமார் 50 மீட்டர் துல்லியத்துடன் அழைப்பவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளது. அழைப்பவர் அந்த முகவரியை உறுதி செய்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு விரைந்து செல்கிறது. ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால் இருப்பிடம் தவறாக காட்டப்பட்டால், கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் உடனடியாக அழைப்பவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான இடத்தை வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்வர். இதன் மூலம் துல்லிய இடைவெளி வெறும் 10 மீட்டராகக் குறைகிறது என்பது சோதனைகளில் தெளிவாக உறுதியாகியுள்ளது.

தற்போது ஒரு அவசர அழைப்பு வந்த பிறகு ஆம்புலன்ஸ் நிகழ்வு இடத்திற்கு சென்றடைய சராசரியாக 10 1/2 நிமிடங்கள் ஆகிறது. இதில் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க மட்டும் 60 முதல் 90 வினாடிகள் வரை வீணாகின்றன. இந்த நேரத்தை குறைந்தபட்சம் பாதியாகக் குறைக்க முடியும் என்று ஜி.வி.கே.-இ.எம்.ஆர்.ஜி. மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார் உறுதியாக தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக குறைந்த அடையாளங் களைக் கொண்ட நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் குறுகிய சந்துகளில் உள்ள வீடுகளில் முகவரியை விவரிப்பது கடினமாக இருக்கும் நேரங்களில் இந்த நவீன முறை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சரியான வழிகளை பற்றியும் பிற விவரங்களை கேட்பதற்காக வண்டியின் வேகத்தை குறைப்பதால் பதிலளிக்கும் நேரம் தாமதமாகலாம். ஆனால் இந்த புதிய தானியங்கி இருப்பிட முறை மூலம் அந்த தாமதங்கள் அனைத்தும் முழுமையாக தவிர்க்கப்படும். அதிக விபத்துகள் நிகழும் பகுதிகள் மற்றும் அவசர அழைப்புகள் அதிகம் வரும் இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டாலும், சில இடங்களி லிருந்து திரும்பி வருவதற்கு அதிக நேரம் ஆகலாம். அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கான உரிய வசதிகள் இல்லாததால் மருத்துவப் பயனாளிக்கு செய்ய வேண்டிய முன் சிகிச்சை முடியாமல் போகலாம். எனவேதான் மருத்துவப் பயனாளியை முன்கூட்டியே சென்று விரைவாக சந்தித்து ஒட்டுமொத்த பயண நேரத்தைக் குறைக்க எங்களால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று அவர் மேலும் விளக்கினார்.

மாரடைப்பு மற்றும் கடுமை யான விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விரைவாக வந்து சேரும் ஆம்புலன்ஸ்களே உயிரைக் காப்பாற்ற மிகவும் முக்கியம் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டில் பிரபல டாய்சஸ் ஆர்ஸ்டெப்ளாட் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஜெர்மன் உயிர்ப்பிப்பு பதிவேட்டு பகுப்பாய்வில், மாரடைப்பு மருத்துவப் பயனாளிகளிடம் ஆம்புலன்ஸ் வந்து சேர எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கூடுதல் நிமிடத்திற்கும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 5 சதவீதம் குறைவதாக அதிர்ச்சி தகவலும் கண்டறியப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கான அனைத்து கட்ட சோதனைகளும் முழுமையாக நிறைவு பெற்று விட்டதாக அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த அதி நவீன அமைப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என்று இ.எம்.ஆர்.அய். தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *