மேட்ரிட், நவ. 13- அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் வீட்டு வாடகை மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
2012ஆம் ஆண்டுக்கு பிறகு, மிகப்பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நடக்கும் இந்த போராட்டத்தில், 40 லட்சத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்று உள்ளனர். மேட்ரிடில் 1.20 லட்சம் மக்களும், பார்சிலோனாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண் டனர்.
பார்சிலோனாவில் நடந்த போராட்டத்தில் குப்பை தொட்டிகளுக்கு தீ வைப்பது, கடைகளின் கண்ணாடிகளை உடைப்பது, காவல்துறை யினர் மீது பட்டாசுகளை கொளுத்திப் போடுவது போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சில கடைகளில் கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். ஸ்பெயினில் வரும் 29ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடை பெற்ற மறுநாளான வியாழக்கிழமையன்று, முக்கிய வீட்டுவசதி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் இடைக்கால கீழவை ஒப்புதல் அளித்து உள்ளது.
69 உறுப்பினா்களைக் கொண்ட இடைக்கால அவையில் 35-34 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, 2030 வரை நிதி மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய குடியிருப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்கப் படும் வரை, அவா்களை வீட்டை விட்டு வெளி யேற்றத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படும் வீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய வாடகை உயா்வைத் தடுக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
