பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங், 1829 டிசம்பரில் சதி நடைமுறையைத் தடை செய்தார். இருப்பினும், பின்னர் அந்தச் சட்டம் தளர்த்தப்பட்டது.
1829 டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான லார்ட் வில்லியம் பெண்டிங்க், சதி நடைமுறைக்கு தடை விதித்தார். சதி என்பது ஒரு ‘பண்டைய இந்து பழக்கம்’ ஆகும். இதன்படி, கணவன் இறந்ததும், அவருடைய மனைவி கணவனின் சடலத்தை எரிக்கும் சிதையில் உயிரோடு விழுந்து இறந்து விடுவார்.
அந்தக் காலத்தில் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த பெண்டிங், 49 மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அய்ந்து நீதிபதிகளுடன் கலந்தாலோசித்தார். “பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான கறையைப் போக்க” இதுவே சரியான தருணம் என அவர் கருதினார். அவரது கருத்துப்படி, சதி நடைமுறையானது “மனித இயல்புக்கு முரணான மற்றும் அருவருக்கத்தக்க” ஒன்றாக இருந்ததுடன், பல இந்துகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இது ஒரு “சட்டவிரோதமான மற்றும் கொடூரமான” நடைமுறையாகக் கருதப்பட்டது.
இந்துப் பெண் கணவனை இழந்த நிலையில், கணவரின் சிதையிலேயே அந்தப் பெண்ணையும் உயிரோடு எரிக்கும் கொடூரத்திற்கு (அது அப்பெண்ணின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் கூட) துணையாக நிற்போரும் தூண்டுதலாக இருப்போரும் ‘கொலைக் குற்றவாளிகளாகவே’ கருதப்படுவர் என சதி ஒழிப்புச் சட்டம் திட்டவட்டமாகக் கூறியது.
மேற்கு வங்கத்தில்
பள்ளிப் பேருந்துமீது ரயில் மோதிய விபத்தில்
3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
கொல்கத்தா, ஜூலை 18 மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் நேற்று காலை பள்ளிப் பேருந்துமீது ரயில் மோதிய விபத்தில், மூன்று பள்ளி குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று (17.7.2026) காலை சுமார் 6.40 மணியளவில், முர்சிதாபாத் பகுதியிலுள்ள ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்க பள்ளிப் பேருந்து ஒன்று முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில், எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 3 பள்ளி குழந்தைகள் உட்பட 5 பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்திருந்ததே இந்த கோர விபத்துக்கு முக்கியக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேட்மேனின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக, விபத்துக்குள்ளான ரயில்வே கிராசிங்கின் கேட்மேன் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘
