கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.6.2026

2 Min Read

அயோத்தி ராமன் கோயில் பண மோசடி வரும் உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பாஜக தலைமை கருதுகிறது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, இப்பிரச்சினையை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதில் மும்முரம் காட்டுகிறது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:கட்சி மாறி வாக்களித்ததால் ஜார்க்கண்ட் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: பா.ஜ ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி.

மீண்டும் உடைந்தது உறுதியானது; உத்தவ் தாக்கரே கூட்டத்தைப் புறக்கணித்த 6 எம்பிக்கள்: ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவுகிறார்கள்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

என்.டி.ஏ (NDA)-வை ‘தேசியக் கட்சித் தாவல் கூட்டணியாக’ (NATIONAL DEFECTORS ALLIANCE) மாற்ற அமித்ஷா தீவிரமாக முயல்கிறார்; மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கான ஒன்றிய உள்துறை அமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெறாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டம்.

தி இந்து:

தமிழ்நாடு சட்டசபை, ஆளுநர் உரையுடன் தொடக்கம்: இரு மொழிக் கொள்கை குறித்து தமிழ்நாட்டின் நீண்ட கால நிலைப்பாட்டை ஆளுநர் உரை மீண்டும் வலியுறுத்தியது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜாதி வாரிக் கணக்கெடுப்பை விரைந்து முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும்; அதைத் தொடர்ந்து மாநில அரசு ‘சமூக நீதி கணக்கெடுப்பை’ மேற்கொள்ளும். மேலும், நீட் (NEET), புதிய கல்விக் கொள்கை (NEP), நிதிப் பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்கள் குறித்த அரசின் நிலைப்பாடுகளும் இந்த உரையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி
டில்லியில் மீண்டும் நாளை கரப்பான் பூச்சி கட்சி போராட்டம். நீட் (NEET) வினாத்தாள் கசிவு சர்ச்சை மற்றும் தேர்வு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஜூன் 20 அன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டில்லி காவல்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக இளைஞர்களின் தலைமையிலான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தெரிவித்தது.

தி டெலிகிராப்:

சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி; கல்வி சீர்திருத்தத்திற்கு மாணவர்களின் ஆதரவை கோரினார். இது வெறும் ஒரு பிரச்சாரம் மட்டுமல்ல என்றும், மலிவு விலையில் கல்வி, நியாயமான தேர்வுகள் மற்றும் கண்ணியமான வேலை வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் முன்வைப்பதற்கான ஒரு தளம் இது என சமூக வலைத்தளத்தில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< ‘தாழ்த்தப்பட்டோர் ஒருவர் ஏன் ஆர்எஸ்எஸ் (RSS) குறித்து கவலைப்பட வேண்டும்?’ ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை” : பிரியங்க் கார்கேவிடம் பாஜக எம்.பி. காஜினாகி கேள்வி; “இந்த அச்சுறுத்தலுக்கான காரணங்கள் என்ன? ‘யாரும் தப்பியதில்லை’ என்று அவர் கூறுவதன் அர்த்தம் என்ன? ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பா? தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அது ஒழித்துக்கட்டுகிறதா?” என கருநாடகா உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே பதிலடி.

 

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *