டெக்கான் கிரானிக்கள், சென்னை:
* ஆர்டிஅய்-யில் சட்டம் ஒழுங்குக்கு விலக்களிக்கும் அரசாணை: கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்தது தவெக அரசு – திமுக, அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து 4 மணி நேரத்தில் அரசாணையைத் திரும்ப பெற்றது
* கரூர் நிகழ்வு மற்றும் கட்சித் தாவல் குறித்து உதயநிதி விமர்சனம்: கரூர் நிகழ்வூ மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல் குறித்து தவெகவை விமர்சித்த உதயநிதி, திமுக மீது கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு அதேபோல் பதிலளிக்க வேண்டும் என மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
டெக்கான் கிரானிக்கள், அய்தராபாத்:
* தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி: எஸ்.அய்.ஆர். விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஆதரவைத் திரட்டி வருகின்றன; செப்டம்பர் 30 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. காஷ்மீர் முதல் கேரளா வரை எஸ்.அய்.ஆர்-க்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் நிலையில், சோனம் வாங்சுக் அக்டோபர் 2-ஆம் தேதி சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியுரிமையை சரிபார்ப்பது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா. 10 மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் 14 முறை ஆட்சேபம் தெரிவித்தது கவலைக்குரிய விஷயம் என்றும் விமர்சனம்.
தி இந்து:
* எஸ்.அய்.ஆர் நடவடிக்கையை நிறுத்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தாமாக முன்வந்து (SUO MOTU) விசாரணை நடத்தக் கோரி 2,000-க்கும் மேற்பட்டோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தி டெலிகிராப்:
* காங்கிரஸ் நடத்தும் சுயமரியாதை கூட்டம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடர்பான ‘தூய்மைப்படுத்தும் சடங்கு’ விவகாரத்தை தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று டில்லியில் தாழ்த்தப்பட்டோர்–ஆதிவாசி சுயமரியாதை கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது. எஸ்.சி., எஸ்.டி. தொடர்பான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்க: எஸ்.அய்.ஆர் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்ததாக கபில் சிபல் குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் பதிவுகள், கருத்து வேறுபாடு குறிப்புகள் மற்றும் உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து, தொடர்புடைய தேர்தல்களை ரத்து செய்வதையும் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை.
– குடந்தை கருணா
