தான் எவ்வளவு கண்டிப்பான முதலமைச்சர் என்பதை ஜோசப் விஜய் நிருபித்துக் காட்ட வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

- Advertisement -

சென்னை, நவ. 13-  ‘முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால், பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘தவறு செய்தால் விடமாட்டேன்’ என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் ‘கடும் எச்சரிக்கை’ விடுத்தார் என டேமேஜ் கன்ட்ரோலுக்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை ‘பிளான்ட்’ செய்திருக் கிறார்கள்.

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய் திருக்க வேண்டும் –––- பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்மீது உரிய நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் ‘ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்’ செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?

‘பஞ்ச்’ டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை. ரியல் ஆக்‌ஷன் எடுத்து, தான் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *