ஆறுகளில் முறையற்ற மணல் எடுப்பதை மூன்று ஆண்டுகளுக்குள் ஒழிக்க வேண்டும் உச்ச நீதிமன்ற மத்தியக் குழு பரிந்துரை

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.12 நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் இருந்து முறையற்ற வகையில் மணல் அள்ளுவதை அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக முழுமையாக ஒழிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) பரிந்துரைத்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநி லங்களின் எல்லையில் அமைந்துள்ள தேசிய சம்பல் சரணாலயத்தில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய குழு தனது 36-வது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்: சுற்றுச்சூழல் பாதிப்புகள்: கட்டுமானப் பணிகளுக்கு மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் அத்தியாவசியமானவை என்றாலும், ஆறுகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் அறிவியல் பூர்வமற்ற முறையில் அதிகப்படியாக மணல் எடுப்பது நதிகளின் இயற்கையான சமநிலையைச் சீர்குலைக்கிறது. இதனால் ஆற்றுப்படுகை சிதைவு, நிலத்தடி நீர் மட்டம் குறைதல், நீர்நிலைகள் அழிதல் மற்றும் நீர்வாழ் உயிரினங் களின் வாழ்விடங்கள் பாதிக்கப் படுவதுடன், ஆறுகளின் இயல்பான வடிவமே மாறும் அபாயம் ஏற்படுகிறது.

3 ஆண்டு காலக்கெடு: அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஆறுகளில் முறையற்ற மணல் அள்ளுவதைப் படிப்படியாக நிறுத்துவதற்குத் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.

மாற்று மணல் ஆதாரங்கள்: கட்டுமானத் தேவைகளுக்காக ஆற்று மணலைச் சார்ந்தி ருப்பதைக் குறைக்க வேண்டும். இதற்கு மாற்றாக, அணைகளில் படிந்துள்ள வண்டல் மண், செயற்கை மணல் (எம்-சாண்ட்) மற்றும் கட்டுமானக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் போன்ற மாற்று ஆதாரங்களை அரசு ஊக்குவித்து, தடையின்றி மணல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிப்பை வலுப் படுத்துதல்: சட்டவிரோதமாக எடுக்கப்படும் ஆற்று மணலின் அளவையோ அல்லது அதன் மதிப்பையோ கணக்கிடுவதற்குத் தற்போது நம்பகமான ஒருங்கிணைந்த தேசிய தரவுத்தளம் எதுவும் இல்லை. எனவே, மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போதைய ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பைக் கடுமையாக வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *